web log free
May 09, 2025

மாவீரர் தினம் அனுஸ்டிக்கும் மக்களுக்கு பாதுகாப்பு தரப்பு விடுத்துள்ள எச்சரிக்கை

நவம்பர் மாதம் வட மாகாணத்தில் மாவீரர் தினம் அனுஸ்டிக்கும் மக்களுக்காக பாதுகாப்பு தரப்பினர் விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளனர்.

மாவீரர்களை கொண்டாடும் பேரில் பயங்கரவாதிகளையோ அல்லது அந்த அமைப்பையோ பிரசாரம் செய்தாலோ அல்லது ஆடம்பரமாக கொண்டாடினாலோ சம்பந்தப்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டு சட்டம் அமுல்படுத்தப்படும் என வடமாகாண பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

நவம்பர் 26ஆம் திகதி எல்.ரீ.ரீ.ஈ அமைப்பின் தலைவர் வேலுப்பில பிரபாகரனின் பிறந்தநாளும் நவம்பர் 27ம் திகதி மாவீரர் தினமாக அனுஷ்டிக்கப்படுவதும் யுத்த காலத்துக்கு முற்பட்டது.

போருக்குப் பின்னர், வடக்கின் அரசியல் பிரதிநிதிகள் உட்பட பல்வேறு தரப்பினர் போரில் உயிரிழந்த மாவீரர்களின் குடும்பங்களை நினைவு கூர்வதாகக் கூறி மாவீரர்களைக் கொண்டாடினர்.

எனினும் இந்நாட்களில் வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் மாவீரர்களை கொண்டாடும் மக்கள் புதை நிலத்தைச் சுத்திகரித்து மாவீரர் துயிலுமில்லங்களை நடத்துகின்றனர்.

இதேவேளை, கிளிநொச்சி கனகபுரத்தில் மாபெரும் மாவீரர் வைபவம் இடம்பெறும் மாவீரர் துயிலுமில்லங்களில் மாவீரர் நினைவுச் சின்னங்கள் உள்ள இடத்தை துப்பரவு செய்வதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதர்ன் உள்ளிட்ட குழுவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd