ஊடகவியலாளர் தரிந்து உடுவேகெதர மற்றும் தரிந்து ஜயவர்தன ஆகியோர் நவம்பர் 8 மற்றும் நவம்பர் 14 ஆம் திகதிகளில் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க இன்று (10) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
முகநூல் சமூகவலைத்தளத்தில் பதிவை பகிர்ந்த குற்றச்சாட்டே இந்த அழைப்பாணைக்கு காரணம் என தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர், சம்மன்களுக்கான உத்தரவுகள் மேலிடத்தில் இருந்து வந்ததாகவும் அவர்களில் பிரதி பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோனின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு செயற்படுவது ஆபத்தான நிலை எனவும், அரசாங்கம் இவ்வாறு செயற்பட்டால் எதிர்காலத்தில் மீண்டும் போராட்டம் நடத்தப்படும் எனவும், ஊடகங்களுக்கு இடையூறு செய்வதை உடனடியாக நிறுத்துமாறும் எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளார்.