web log free
August 20, 2025

'சாம்பலுடன் எழுவோம்' எழுச்சிக் கூட்டங்கள் வீழ்ச்சிப் பாதையில்...

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் ஆரம்பிக்கப்பட்ட 'சாம்பலுடன் எழுவோம்' கூட்டத் தொடர் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

அக்கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் கீழ் அக்கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இந்தக் கூட்டத் தொடர் ஆரம்பமாகியிருந்தது.

இவற்றில் மூன்று கூட்டங்கள் அண்மையில் களுத்துறை நாவலப்பிட்டி மற்றும் புத்தளத்தில் நடைபெற்றன.

தற்போதைய சூழ்நிலையில் அரசியல் கூட்டங்களை நடத்துவது மிகவும் பொருத்தமானதல்ல என கட்சியின் அமைச்சர்கள் குழு சுட்டிக்காட்டியதையடுத்து இந்த கூட்டத் தொடரை தற்காலிகமாக நிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

முதலில் கட்சிகளை கவனித்து பின்னர் கூட்டத்தை நடத்தி கட்சியை அமைப்பதே சிறந்தது என மக்கள் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். 

Last modified on Saturday, 12 November 2022 10:38
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd