பொதுமன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்ட பின்னர் இதுவரையான காலப்பகுதியில் விடுமுறையின் பின்னர் பணிகளுக்கு திரும்பாமல் இருந்த 5900 இராணுவ வீரர்கள் மீண்டும் கடமைக்கு திரும்பியுள்ளனர்.
ஏப்ரல் 22ஆம் திகதி முதல் மே 10ஆம் திகதி வரை பொதுமன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இவர்கள் கடமைக்கு திரும்பியுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.
இந்த வருடத்துக்கான பொதுமன்னிப்பு காலம் ஏப்ரல் 22ஆம் திகதி முதல் மே 10ஆம் திகதி வரை அறிவிக்கப்பட்டுள்ளது.
இராணுவத்தில் இருந்து தப்பிச்சென்றுள்ளவர்கள் மற்றும் 21 நாட்களுக்கு மேல் விடுமுறையில் இருந்த பின்னர் பணிகளுக்கு திரும்பாதவர்கள், 6 மாதங்களுக்கு மேலாக பணிகளுக்கு திரும்பாதவர்கள் ஆகியோருக்கே இந்த பொதுமன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், குறித்த இராணுவ வீர்கள் பொதுமன்னிப்பு காலப்பகுதியில் பணிகளுக்கு திரும்பினால் அவர்கள் சேவைகளில் இருந்து உத்தியோகபூர்வமாக செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று இராணுவம் அறிவித்திருந்தது.
இந்த நிலையில், இவ்வாறு பொதுமன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்ட பின்னர் இதுவரையான காலப்பகுதியில் ஸ்ரீலங்கா இராணுவத்தில் இருந்து அறிவிக்காமல் சேவைக்கு கடமையளிக்காத 5900 இராணுவ வீரர்கள் கடமைக்கு திரும்பியுள்ளதாக இராணுவ ஊடகப்பேச்சாளர் சுமித் அத்தப்பத்து ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.