web log free
November 26, 2024

கடிதங்களுடன் கைதானவர்கள் CID யிடம் ஒப்படைப்பு

600 கடிதங்களுடன் நேற்று கைது செய்யப்பட்ட மூன்று சந்தேகநபர்களும் குற்றப் புலனாய்வு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர இதனை தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு எதிராகவும் இனங்களுக்கு இடையில் ஐக்கியத்தை சீர்குலைக்கக் கூடிய கருத்துக்களையும் உள்ளடக்கிய 600 கடிதங்களுடன் மூன்று சந்தேகநபர்கள் நேற்று கைது செய்யப்பட்டனர்.

கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவல்களுக்கு அமைய கொழும்பு மத்திய தபால் நிலையத்தில் கடிதங்களை பரிமாறும் பிரிவில் நேற்று பிற்பகல் இவர்கள் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Last modified on Monday, 09 September 2019 02:26
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd