முன்ளாள் பாதுகாப்பு துறை பிரதானிகளால் நாட்டின் தற்போதைய சூழ்நிலை தொடர்பில் தயாரிக்கப்பட்ட அறிக்கை தமக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக, எதிர்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் தெரியப்படுத்தியுள்ளார்.
நேற்று மாலை எதிர்கட்சித்தலைவர் மகிந்த ராஜபக்ஷவும் சில எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்திருந்தனர்.
இதன்போது எதிர்கட்சித்தலைவர் இந்த விடயத்தை ஜனாதிபதியிடம் கூறியதாக, அந்த சந்திப்பில் கலந்துக் கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.
தங்களது அனுபவத்தை பயன்படுத்தி பரிந்துரைகளை முன்வைக்கும் வகையில் அறிக்கையை தயாரித்து வழங்குமாறு முன்னாள் பாதுகாப்புத்துறை பிரதானிகளிடம் எதிர்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷ கோரி இருந்தார்.
கடந்த 28ம் திகதி அவர்களுடன் நடந்த சந்திப்பின் போது அவர் இந்த கோரிக்கையை முன்வைத்திருந்த நிலையில், அந்த அறிக்கை நேற்று அவரிடம் கையளிக்கப்பட்டது.