web log free
March 28, 2024

தர்கா நகரில் அரச மரம் வெட்டப்பட்டதால் குழப்பம்

அளுத்கம தர்கா நகரில் இருபத்தைந்து வருடங்கள் பழமையான அரச மரத்தை வெட்டிய மூன்று பௌத்த மதத்தினர் உட்பட ஏழு பேரை அளுத்கம பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த ஏழு பேரும் இணைந்து ஒரே முடிவின் பேரில் தர்கா நகரில் உள்ள அம்கஹா சந்திப்பில் உள்ள இந்த அரச மரத்தை வெட்டி அகற்றியுள்ளனர்.

இது தொடர்பில், பௌத்த தேரர் மற்றும் பிரதேசவாசிகள் பலர் அளுத்கம பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இதன்படி சம்பவம் தொடர்பில் மூன்று சிங்கள பிரஜைகளும் நான்கு முஸ்லிம்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர்களின் இந்த செயல் இனவாத கலவரமாக உருவாகியுள்ளது.

பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகளின் தலையீட்டினால் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் பயிர்களுக்கு பாதுகாப்பற்ற நிலையில் இருந்தமையினால்  வெட்ட முற்பட்டதாக பொலிஸார் முன்னிலையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை நேற்று களுத்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய அளுத்கம பொலிஸார், இவர்களது நடவடிக்கையினால் தேசிய இன நல்லிணக்கம் குழப்பம் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கூறி அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு கோரியுள்ளனர்.

ஆனால் அந்த கோரிக்கையை நிராகரித்த களுத்துறை நீதவான் நீதிமன்றம் சந்தேக நபர்களை பிணையில் விடுவித்துள்ளது.