web log free
April 25, 2025

பாதாள உலக குழு தலைவரின் அடியாட்கள் சுட்டுக் கொலை

தற்பொழுது வெளிநாட்டில் இருக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியும் பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரனுமான ஊரகஹ இந்திக்கவின் அடியாட்கள் இருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளுடனான துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டுள்ளனர்.

24.08.2022 அன்று ஊரகஹா பிரதேசத்தில் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதோடு 19.10.2022 அன்று யக்கலமுல்ல பொலிஸ் பிரிவில் 04 நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் பிரதான துப்பாக்கிச் சூடு நடத்திய நபரையும் மோட்டார் சைக்கிளில் பயணித்தவரையும் கைது செய்யச் சென்ற போது துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது. 

சந்தேக நபர்கள் மிலன் கோசல (ஜுண்டா) மற்றும் கமகே திலுகா (முலா) ஆகிய இருவரும் மினுவாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர்.

T-56 ரக துப்பாக்கி, 01 12 போர் வெடிமருந்து துப்பாக்கி மற்றும் ரம்போ ரக கத்தி ஆகியவற்றை விசேட அதிரடிப்படையினர் கண்டுபிடித்துள்ளனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd