web log free
May 14, 2026

பல்கலைக்கழக மாணவர்கள் மீது பொலிஸார் தாக்குதல்

கொழும்பு, மல்பாரா பகுதியில் பல்கலைக்கழக மாணவர் பேரவையினால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்திற்கு பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைகளை பிரயோகித்துள்ளனர்.

சிறையிலுள்ள வசந்த முதலிகே மற்றும் கல்வெவ சிறிதம்ம தேரர் ஆகியோரை விடுதலை செய்யுமாறு கோரியே இந்த போராட்டம் நடத்தப்படுகிறது.

இதனையடுத்து கொழும்பு பௌத்தலோக மாவத்தையை மூடுவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்திருந்தனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd