web log free
April 25, 2025

கோட்டாபயவிற்கு நீதிமன்றம் அழைப்பு

துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கியமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பில் எதிர்வரும் டிசம்பர் மாதம் 16ஆம் திகதி நீதிமன்றத்தில் சாட்சியமளிக்குமாறு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கின் பிரதிவாதியாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை இணைத்துக்கொள்ளவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு உருது பெர்னாண்டோ யசந்த கோதாகொட தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd