web log free
June 10, 2026

எச்சரிக்கை! நாடு முழுவதும் ஒருவகை வைரஸ் பரவுகிறது

இன்புளுவன்சா போன்ற அறிகுறிகளுடன் கூடிய வைரஸ் நோய் இந்த நாட்களில் நாடளாவிய ரீதியில் பரவி வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கொவிட் நோயுடன் ஒப்பிடுகையில், இந்த நோயினால் ஏற்படும் சிக்கல்கள் ஒப்பீட்டளவில் குறைவாகவே காணப்படுவதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் டாக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

சளி, இருமல் மற்றும் காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் இந்த நோய் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவும் அபாயம் இருப்பதால் முறையான சுகாதார ஆலோசனைகளை பின்பற்றுவது அவசியம் என்று நிபுணர் கூறினார்.

நிலைமை மோசமடைந்தால் மாத்திரமே வைத்திய ஆலோசனையைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் மேலும் தெரிவித்துள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd