இராஜாங்க அமைச்சர் டயானா கமகே பிரித்தானிய பிரஜாவுரிமையை பெற்றுள்ளமையினால் அவரது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்து செய்யுமாறு கோரி சட்டத்தரணி அசில் பாரிஸ் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, எதிர்வரும் டிசம்பர் மாதம் 12ஆம் திகதி இந்த விடயத்தை நீதிமன்றத்தில் தெரிவிக்குமாறும், இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் மேன்முறையீட்டு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அன்றைய தினம் அமைச்சர் டயானா கமகேவின் பிரித்தானிய குடியுரிமை தொடர்பான அனைத்து ஆவணங்களையும் மேன்முறையீட்டு நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.