web log free
December 05, 2025

இலங்கையில் பணம் கொள்ளையடித்து துபாயில் முதலீடு செய்த திலினி

பாரிய நிதி மோசடி சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலி என்ற சந்தேகநபர் துபாய் இராஜியத்தில் தொழில் ஒன்றை ஆரம்பித்துள்ளதுடன், குறித்த வர்த்தகம் அவரது பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோடீஸ்வர வர்த்தகர்களிடம் மோசடி செய்த பணத்தை சந்தேகநபர் டுபாய் நாட்டில் வர்த்தகம் ஒன்றில் முதலீடு செய்துள்ளதாகவும், இது தொடர்பில் ஏற்கனவே விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றப்புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம், சர்வதேச பொலிஸ் மற்றும் மத்திய வங்கி ஊடாக தகவல் கோரப்பட்டுள்ளதாகவும், விசாரணையின் முன்னேற்றம் குறித்து எதிர்காலத்தில் குறிப்பிடப்படும் எனவும், குற்றப்புலனாய்வு திணைக்களம், நீதவானிடம் சுருக்கமான ஆதார அறிக்கையை தாக்கல் செய்தது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd