web log free
November 22, 2024
இலங்கை மக்களுக்கு மூன்நாவது தடுப்பூசியான பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இன்று (01) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன் அடிப்படையின் முதலாவதாக முன்னிலை சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு பூஸ்டர் தடுப்பூசியாக ´பைஸர்´ தடுப்பூசியே செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
 

இலங்கையின் பிரபல கிரிக்கெட் வீரர் பேஸ் கிங் லசித் மலிங்கா அனைத்து கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற முடிவு செய்துள்ளார்.

1983 ஆகஸ்ட் 28 இலங்கையின் காலி நகரில் பிறந்த லசித் மாலிங்க இலங்கைத் துடுப்பாட்ட அணியின் வீரர் மற்றும் ஒருநாள் இருபதுக்கு 20 போட்டிகளின் முன்னாள் தலைவர் ஆவர். இவர் சிறப்பு அதிவேகப் பந்து வீச்சாளராக அணியில் இடம் பிடித்துள்ளார். இவர் வலது கை வேகபந்து வீச்சாளர் என்ற தனிப்பட்ட பந்து வீச்சு திறனைக் கொண்டவர். இவ்வாறான சிப்பான தனிப்பட்ட திறமையால் உலகெங்கிலும் பல தரப்பட்ட ரசிகர்களை தன்வசப்படுத்தியுள்ளார். இவரது பந்துவீச்சு பாணி காரணமாக 'சிலிங்க மாலிங்க' என்ற புனைப்பெயரால் அழைக்கப்படுகிறார்.

இவர் இலங்கை அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாடி வந்தார்.  இவர் இன்று வரை சிறந்த பந்துவீச்சாளர் என்ற தன் இடத்தை யாருக்கும் விட்டுக்கொடுக்காத சிறந்த வீரர்களுள் ஒருவராகக் கருதப்படுகிறார். இவர் பொதுவாக 140 தொடக்கம் 150 கிலோமிட்டர்/மணித்தியாலத்திற்கு என்ற வேகத்தில் பந்துவீசுவார்.

இவரின் சாதணைகள் ஏராளம். இலங்கையை கிரிக்கெட் வாழ்வில் நிலைநிறுத்தியவர்களுள் முக்கியமான இடம் மலிங்கவுக்கு உண்டு. பன்னாட்டு இருபதுக்கு 20 போட்டிகளில் அதிக இலக்குகள் வீழ்த்திய பந்துவீச்சாளர்களின் பட்டியலில் இரண்டாவது இடம் பிடித்துள்ளார். முதலிடத்தில் பாகிஸ்தான் அணியின் துடுப்பாட்ட வீரர் சாகித் அஃபிரிடி உள்ளார். 2014 ஐசிசி உலக இருபதுக்கு 20 தொடரில் இவரின் தலைமையிலான இலங்கை அணி கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது.

இலங்கை அணியில் நட்சத்திர பௌலர் லஷித் மலிங்கா டெஸ்ட், ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்துவிட்டு, டி20 கிரிக்கெட்டில் மட்டும் தொடர்ந்து விளையாடி வந்தார். இந்நிலையில் 2020ஆம் ஆண்டு மேற்கிந்தியத் தீவு அணிக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்ற மலிங்காவுக்கு அதன்பிறகு வாய்ப்பு வழங்கப்படவில்லை. விரைவில் அணிக்குத் திரும்புவார் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த நிலையில் நேற்று தன் டுவிட்டர் பக்கத்திலும் பேஸ்புக் பக்கத்திலும்  தான் கிரிக்கெட் வாரியத்திலிருந்து ஓய்வு பெற்றுள்ளேன் என்பதை தன் ரசிகர்களிடம் தெரிவித்துள்ளார்.

"விளையாட்டின் உணர்வை உயர்த்துவதற்காக வளரும் இளைய தலைமுறையினருக்கு நான் தொடர்ந்து ஆதரவளிப்பேன், விளையாட்டை விரும்பும் அனைவருடனும் நான் எப்போதும் இருப்பேன்," என்று அவர் பேஸ்புக்கில் பதிவு செய்துள்ளார்.

சற்று நேரத்திற்கு முன் இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை நாடாளுமன்ற பொதுச் செயலாளர் முன்னிலையில் இராஜினாமா செய்துள்ளார். நிவாட் கப்ரால் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்தது  இலங்கை மத்திய வங்கி ஆளுநரான W.D. லக்ஷ்மன் அவர்களின் ஓய்வின் பின் பதிலாளுனராக  தான் பொறுப்பேற்கவே என்பது குறிப்பிடத்தக்கது.

இராஜாங்க அமைச்சர் தனது ராஜினாமா கடிதத்தை வழங்குவதற்கு முன் அனுராதபுரத்தில் மத சடங்குகளில் ஈடுபட்டார். அவர் இந்த வாரம் மத்திய வங்கியின் ஆளுநராக பதவியேற்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கொரோனா தடுப்பூசிகளுள் ஒன்றான மொடோனா தடுப்பூசியின் எதிர்ப்பு சக்தி தொடர்பான ஆய்வறிக்கை அடுத்த வாரம் வெளியாகும் என ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மூலக்கூறு உயிரியல் துறை பிரிவின் தலைவர் சந்திம ஜுவந்தர தெரிவித்துள்ளார்.

மொடோனா தடுப்பூசிகள் பெற்றுக்கொண்டாவர்களின் மாதிரிகள் ஆய்விற்கு அனுப்பப்பட்டு தற்பொழுது ஆய்வுகள் இறுதி கட்டத்தை அடைந்துள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஸ்புட்னிக்V தொடர்பான ஆய்வுகள் அடுத்த வாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதும் அண்மையில் சைனபார்ம் தடுப்பூசியின் எதிர்ப்பு சக்தி தொடர்பான ஆய்வறிக்கை வெளியிடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் எதிர்வரும் 13ஆம் திகதிக்கு பின்னரும் நீடிக்கப்படுமா என்பது தொடர்பில் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை தீர்மானம் எடுக்கப்படும் என தெரியவருகின்றது.

கொரோனா ஒழிப்பு செயலணியின் வாராந்த மீளாய்வுக்கூட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ தலைமையில் வெள்ளிக்கிழமை கூடவுள்ளது.

இதன்போதே நாட்டின் தற்போதைய நிலைமை மீளாய்வு செய்யப்பட்டு ஊரடங்கு தளர்த்தப்படுமா அல்லது நீடிக்கப்படுமா என்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது

Page 1 of 2
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd