web log free
June 06, 2025

மொடோனா தடுப்பூசி யின் எதிர்ப்பு சக்தி தொடர்பான ஆய்வறிக்கை அடுத்த வாரம் வெளியாகும்!

கொரோனா தடுப்பூசிகளுள் ஒன்றான மொடோனா தடுப்பூசியின் எதிர்ப்பு சக்தி தொடர்பான ஆய்வறிக்கை அடுத்த வாரம் வெளியாகும் என ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மூலக்கூறு உயிரியல் துறை பிரிவின் தலைவர் சந்திம ஜுவந்தர தெரிவித்துள்ளார்.

மொடோனா தடுப்பூசிகள் பெற்றுக்கொண்டாவர்களின் மாதிரிகள் ஆய்விற்கு அனுப்பப்பட்டு தற்பொழுது ஆய்வுகள் இறுதி கட்டத்தை அடைந்துள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஸ்புட்னிக்V தொடர்பான ஆய்வுகள் அடுத்த வாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதும் அண்மையில் சைனபார்ம் தடுப்பூசியின் எதிர்ப்பு சக்தி தொடர்பான ஆய்வறிக்கை வெளியிடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

Last modified on Sunday, 12 September 2021 10:12
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd