web log free
April 26, 2024

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்த, சீனத் தூதுவர் செங் ஷியுவான், சீன ஜனாதிபதியின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியை அவரிடம் நேரில் கையளித்துள்ளார்.

இந்தச் சந்திப்பு, நேற்று முன்தினம் (03) இடம்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த மாத இறுதியில் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவுக்கு சீன ஜனாதிபதியின் தனிப்பட்ட வாழ்த்துச் செய்தியை, சீனத் தூதுவர் கையளித்திருந்தார்.

இதேவேளை, சில நாட்களுக்கு முன்னதாக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும் சபாநாயகர் கரு ஜெயசூரியவையும் சந்தித்திருந்த சீனத் தூதுவரால், சீன ஜனாதிபதியின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி, கையளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் ஐந்து மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி, மேல் மாகாண ஆளுநராக அசாத் சாலியும் கிழக்கு மாகாண ஆளுநராக எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வடமத்திய மாகாண ஆளுநராக சரத் ஏக்கநாயக்க, மத்திய மாகாண ஆளுநராக மைத்திரி குணரத்ன, வடமேல் மாகாண ஆளுநராக பேசல ஜயரத்ன ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நியமனங்கள், செயலகத்தில் வைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் வழங்கப்பட்டுள்ளன.

ரஜரட்ட பல்கலைக்கழகத்தில், நான்கு பீடங்கள் திகதி குறிப்பிடப்படாமல் மூடப்பட்டுள்ளன என அந்தப் பல்கலைக்கழகத்தின் உப-வேந்தர் பேராசிரியர் ரஞ்சித் விஜேவர்தன தெரிவித்தார்.
சமூக விஞ்ஞானம் மற்றும் மனிதவள சாஸ்திர பீடம், முகாமைத்துவப் பீடம்,பயன்பாட்டு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப விஞ்ஞானப் பீடம் ஆகியனவே இவ்வாறு மூடப்பட்டுள்ளன.
அந்தப் பல்கலைக்கழகத்தில் வகுப்புத்தடை விதிக்கப்பட்ட மாணவர்கள் 16 பேரின் வகுப்புத் தடையை நீக்குமாறு கோரி, மாணவர்கள், நிர்வாகக் கட்டிடத்தை கடந்த 27 ஆம் திகதியன்று
இதனையடுத்தே, மேற்படி முடிவு எட்டப்பட்டதாக நிர்வாகம் அறிவித்துள்ளது.

Page 2 of 2