இன்று கொழும்பில் 21 கம்பஹாவில் 26 களுத்துறையில் 24 குருநாகலில் 9 புத்தளத்தில் 2 நுவரெலியாவில் 7 மாத்தளையில் 1 பதுளையில் 14 மொனராகலவில் 12 காலியில் 4 மாத்தறையில் 9 ஹம்பந்தொடவில் 12 ரத்தினபுரியில் 3 கேகாலவில் 5 அநுராதபுரத்தில் 8 யாழ்பாணத்தில் 40 கிளிநொச்சியில் 4 முல்லைதீவில் 3 மன்னாரில் 3 வவுனியாவில் 12 திருகோணமலையில் 16 மட்டக்களப்பில் 31 மற்றும் அம்பாறையில் 27 என நாடு முழுவதும் 297 தடுப்பூசி மையங்கள் செயற்பட்டவண்ணம் இருப்பதாக சுகாதார வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது.
நேற்றைய தினம் மொத்தமாக 147114 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தகவல் வழங்கியுள்ளது.
இந்நிலையில் மொடோனா தடுப்பூசியின் 1வது டோஸ் 30 பேருக்கும் 2வது டோஸ் 1815 பேருக்கும் வழங்கப்பட்ட நிலையில் சைனபார்ம் தடுப்பூசியின் 1வது டோஸ் 51798 பேருக்கும் 2வது டோஸ் 88700 பேருக்கும் வழங்கப்பட்டுள்ளது.
அதே போல் அஸ்ட்ரசெனிகா தடுப்பூசியின் 1வது டோஸ் 3194 பேருக்கும் 2வது டோஸ் 839 பேருக்கும் பைசர் தடுப்பூசியின் 1வது டோஸ் 353 பேருக்கும் 2வது டோஸ் 385 பேருக்கும் வழங்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
கொரோனா தடுப்பூசிகளுள் ஒன்றான மொடோனா தடுப்பூசியின் எதிர்ப்பு சக்தி தொடர்பான ஆய்வறிக்கை அடுத்த வாரம் வெளியாகும் என ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மூலக்கூறு உயிரியல் துறை பிரிவின் தலைவர் சந்திம ஜுவந்தர தெரிவித்துள்ளார்.
மொடோனா தடுப்பூசிகள் பெற்றுக்கொண்டாவர்களின் மாதிரிகள் ஆய்விற்கு அனுப்பப்பட்டு தற்பொழுது ஆய்வுகள் இறுதி கட்டத்தை அடைந்துள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ஸ்புட்னிக்V தொடர்பான ஆய்வுகள் அடுத்த வாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதும் அண்மையில் சைனபார்ம் தடுப்பூசியின் எதிர்ப்பு சக்தி தொடர்பான ஆய்வறிக்கை வெளியிடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.