web log free
April 26, 2025
kumar

kumar

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு இன்று (21) பாராளுமன்றத்தில் இடம்பெற்ற நிலையில், சட்டமூலத்திற்கு ஆதரவாக 179 வாக்குகளும், சட்டமூலத்திற்கு எதிராக 1 வாக்கும் அளிக்கப்பட்டன.

அதற்கமைய அரசியல் அமைப்பின் 22 ஆம் திருத்த சட்டமூலம் இரண்டாம் வாசிப்பு 178 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

மீண்டும் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நடத்தப்பட்ட போது, சட்டமூலத்திற்கு ஆதரவாக 174 வாக்குகள் அளிக்கப்பட்டன.

எதிராக எந்தவித வாக்குகளும் அளிக்கப்படவில்லை. ஒருவர் வாக்களிப்பை புறக்கணித்திருந்தார்.  

சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட ஹம்மர் வாகனம் , பறிமுதல் செய்யப்பட்டதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட ஏலத்தில் இறக்குமதி செய்த நபருக்கு வழங்கப்பட்ட சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான எழுத்து மூலமான கோரிக்கை நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டியவின் ஆலோசனையின் பேரில் அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தனவினால் இன்று (21) பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அதன்படி பிரதமரின் உத்தரவின் பேரில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இது தொடர்பான விசாரணைகளை ஆரம்பிக்க உள்ளனர்.

சம்பவம் தொடர்பில் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இதற்கு முன்னர் சுங்கப் பணிப்பாளர் நாயகத்திடம் அறிக்கை கோரியதுடன், அந்த அறிக்கையின் பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த வாகனம் கடந்த வருடம் பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டது.

பின்னர் அது பறிமுதல் செய்யப்பட்டு, பின்னர் நடந்த பொது ஏலத்தில், சம்பந்தப்பட்ட காரை இறக்குமதியாளரே வாங்கினார்.

இந்த சம்பவம் தொடர்பில் உடனடி அறிக்கையை வழங்குமாறு நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய, சுங்கப் பணிப்பாளர் நாயகத்திற்கு முன்னர் உத்தரவிட்டிருந்தார்.

2022ஆம் ஆண்டுக்கான  கல்வி விதிமுறைகளை திருத்துவதற்கான சுற்றறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

சுற்றறிக்கையின்படி, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை டிசம்பர் 18 ஆம் திகதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

உயர்தரப் பரீட்சை அடுத்த வருடம் ஜனவரி 23ஆம் திகதி ஆரம்பமாகி பெப்ரவரி 17ஆம் திகதி வரை நடைபெறும் எனவும் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

ராஜபக்சவின் குடும்ப ஆட்சியை அகற்றி ஜனநாயகத்தை வலுப்படுத்தும் வேலைத்திட்டம் குறித்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் பரபரப்பாக பேசப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட தவறான செயற்பாடுகளை மீள்பரிசீலனை செய்வதற்கும், அந்தத் தவறான செயற்பாடுகள் மீண்டும் இடம்பெறாத வகையில் பணிகளை முன்னெடுப்பதற்கும் கட்சியின் சிரேஷ்டர்கள் குழுவொன்று தற்போது செயற்பட்டு வருகின்றது.

அதன்படி கட்சியை மீளக் கட்டியெழுப்ப வேண்டுமாயின் முதலில் கட்சிக்குள் ஜனநாயகம் உருவாக்கப்பட வேண்டும், கட்சிக்கு மத்திய குழுவும் செயற்குழுவும் இருக்க வேண்டும் என கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு அதற்கு கட்சியும் இணக்கம் தெரிவித்துள்ளது. 

ராஜபக்ச குடும்பத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட மாட்டாது என மக்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் எதிர்பார்த்ததாகவும் ஆனால் அது நடக்கவில்லை என்பது தனக்கு தனிப்பட்ட முறையில் தெரியும் எனவும் ஜனாதிபதி கோட்டாபய அதனை விரும்பவில்லை எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

ஆனால் ராஜபக்ஷக்கள் அதிகளவான மக்களுக்கு அமைச்சரவை அமைச்சர்களை வழங்கியதாகவும் இவை தவறான தீர்மானங்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கட்சியில் ஜனநாயகத்தை உருவாக்குவதற்காக முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு பசில் ராஜபக்ஷவும் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும், அந்த கலந்துரையாடல்களில் பசில் ராஜபக்ஷவும் கலந்து கொண்டதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டார்.

"அவரும் ஒப்புக்கொள்கிறார். அவரும் அந்த விவாதங்களுக்கு வந்தார். அது இல்லாமல் சாத்தியமில்லை. இதை செய்யவில்லை என்றால் இந்த கட்சியே உடைந்து விடும். இத்தனை விஷயங்களுக்குப் பிறகும் கட்சிக்கு புரியவில்லை என்றால் கட்சி இன்னும் உடைந்து விடும். நான் புரிந்து கொண்ட வரையில், கட்சியில் இந்தக் கருத்துக்காக நான் பெரிய போராட்டத்தை நடத்தி வருகிறேன். எனது நாவலப்பிட்டி சந்திப்பில் எமது செயற்பாட்டாளர்களை நான்கு கதைகளை கேட்க வைக்கிறேன். பந்துல குணவர்தன, ரமேஷ் பத்திரன, காஞ்சன விஜேசேகர ஆகியோர் பேசுகின்றனர். ஒருவர் நாட்டின் பொருளாதாரம் பற்றி பேசுகிறார். அடுத்தவர், நாட்டில் ஊட்டச்சத்து உணவுப் பற்றாக்குறை ஏற்படுமா என்று பேசுகிறார். எரிபொருள் நெருக்கடி பற்றி காஞ்சனா பேசுகிறார். நாம் புதிய வழியில் செல்ல வேண்டும். நாம் ஒரு புதிய வழியில் செல்ல வேண்டும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். முன்பு போல் தொடர்ந்தால், நம் வாழ்வில் அரசுகளை உருவாக்க வேண்டியதில்லை. எனவேதான் கட்சியின் இளைஞர்களுக்கு பதவி வழங்க வேண்டும். புதிய முகத்தைப் பெற வேண்டும். இந்த சம்பவங்களின் பின்னர் மகிந்த ராஜபக்ச மற்றும் பாராளுமன்ற குழு பசில் ராஜபக்ஷ உட்பட அனைவரையும் சந்தித்தோம். அங்கே நாம் பேசியதைச் சொன்னேன். பசில் ராஜபக்ஷவும் அதனை ஏற்றுக்கொண்டார். ரமேஷ் பத்திரன, காஞ்சனா விஜேசேகர போன்ற இளைஞர்களுக்கு கட்சியில் இடம் கொடுக்க வேண்டும். நாமல் ராஜபக்ஷ நல்லவர். மேலும் மற்றவர்களுக்கு இடம் கொடுக்க வேண்டும். கட்சிக்கு புதிய முகத்தை கொடுத்து, புதிய வேலைத்திட்டத்துடன் முன்னோக்கி செல்ல வேண்டும்" என்றார். 

தன்னம்பிக்கையை அடைவதன் அவசியத்தை வலியுறுத்தி, மத்திய பாதுகாப்பு மற்றும் சுற்றுலாத்துறை இணை அமைச்சர் அஜய் பட் வியாழன் அன்று இலங்கை மிகவும் மோசமான பொருளாதார நெருக்கடியில் இருப்பதால், அதன் பாதுகாப்புப் படையினர் இந்தியாவில்  பயிற்சிகளுக்கு பெயரளவிலான கட்டணத்தை செலுத்த முடியவில்லை  இணை அமைச்சர் அஜய் பட் சுட்டிக்காட்டினார்.

ஆப்பிரிக்க நாடான காம்பியாவில் இருமல் மருந்து சாப்பிட்ட 66 குழந்தைகள் பலியானது தொடர்பாக சமீபத்தில் வெளியான தகவல்கள் உலகமெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பிரச்சினைக்குரிய இந்த மருந்துகளை இந்தியாவில் அரியானாவின் சோனிப்பட்டில் உள்ள மெய்டன் பார்மசூடிகல்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்தது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்படுகிறது.

இந்தோனேசியாவில் திரவ வடிவிலான மருந்துகளை சாப்பிட்ட சுமார் 100 குழந்தைகள் இறந்துள்ளதாக அதிர வைக்கும் தகவல் வெளியாகி மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், இந்தோனேசிய நாட்டில் அனைத்து விதமான திரவ மருந்துகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி இந்தோனேசியா கூறுகையில், "திரவ வடிவிலான சில மருந்துகளில் கடுமையான சிறுநீரக காயத்தை ஏற்படுத்துகிற (நச்சு) பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த ஆண்டில் 99 இளம் குழந்தைகள் இறந்துள்ளன" என தெரிவித்தது. மேலும், இந்தோனேசிய சுகாதார மந்திரி புதி குணாதி சாதிகின் கூறுகையில், " 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் சிறுநீரக காயம் ஏற்பட்டுள்ள குழந்தைகளுக்கு தரப்பட்ட மருந்துகளில (நச்சுத்தன்மை கொண்ட) டைதிலீன் கிளைகால் மற்றும் எத்திலீன் கிளைகால் அதிகளவு இருப்பது தெரியவந்துள்ளது" என தெரிவித்தார். இந்த மருந்துகள் இறக்குமதி செய்யப்பட்டவையா அல்லது உள்நாட்டில் தயாரிக்கப்பட்டவையா என்பது குறித்து தகவல் இல்லை.

இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி அரசியலமைப்பின் உத்தேச 22வது திருத்தத்திற்கு நிபந்தனையுடன் கூடிய ஆதரவை வழங்குவதாக உறுதியளித்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் எதிர்கட்சித் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச கூறுகையில், குழுநிலையில் எந்தவிதமான மறுசீரமைப்புகளும் முயற்சிக்கப்படாமைக்கு ஐக்கிய மக்கள் சக்தி தனது ஆதரவை வழங்கியுள்ளது என அவர் தெரிவித்தார்.பாராளுமன்றத்தில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் பிரேமதாச இரண்டு முக்கிய நிபந்தனைகளுக்கு உட்பட்டு நல்லெண்ண அடிப்படையில் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு ஆதரவாக வாக்களிக்கவுள்ளதாக தெரிவித்தார்.

"முதலாவதாக, இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள் நாடாளுமன்றத்திற்குள் நுழைவதைத் தடை செய்வதில் எந்த மாற்றமும் இல்லை, இரண்டாவதாக இரண்டரை ஆண்டுகளில் நாடாளுமன்றத்தைக் கலைக்கும் ஜனாதிபதியின் அதிகாரத்தை மாற்றும் முயற்சியும் இல்லை" என்று அவர் கூறினார்.

இந்த நிபந்தனைகளின் அடிப்படையில் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களிக்க இணங்கியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் தெரிவித்தார்.

"இது கட்சியால் கோரப்படும் பரந்த சீர்திருத்தம் இல்லையென்றாலும், ஐக்கிய மக்கள் சக்தி நாட்டின் நலன்களுக்காக நெகிழ்வாக இருக்க தயாராக உள்ளது" என்று பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச மேலும் கூறினார்.

கோதுமை மாவின் விலை மேலும் 25 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

எனினும், பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை குறைக்கப்பட மாட்டாது என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த வாரத்தில் மாவின் விலை 110 ரூபாவினால் குறைந்துள்ள போதிலும், பேக்கரி பொருட்கள் முன்னைய விலைக்கே விற்பனை செய்யப்படுகின்றன.

இதனடிப்படையில் 290 ரூபாவாக இருந்த ஒரு கிலோ கோதுமை மாவின் விலை 265 ரூபாவாக குறைவடைந்துள்ளது.

தீபாவளியை முன்னிட்டு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை 25 ம் திகதி தமிழ் பாடசாலைகளுக்கு விஷேட விடுமுறை வழங்கப்படுவதாகவும் அதற்குப் பதிலீடாக பாடசாலை 29 ம் திகதி சனிக்கிழமை நடைப்பெறும் என்றும் கல்வி இராஜாங்க அமைச்சர் அ. அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார். 

அமைச்சரவையின் அனுமதியைத் தொடர்ந்து, தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக ஸ்தாபிக்கப்பட்ட இட்டுகம (செய்கடமை) கொவிட்-19 சுகாதார மற்றும் சமூகப் பாதுகாப்பு நிதியத்தின் செயல்பாடுகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

85737373 என்ற இலங்கை வங்கி கணக்கு இலக்கத்தில் இயங்கி வந்த குறித்த நிதியமானதும் 18 ஆம் திகதி முதல் மூடப்பட்டுள்ளதாக நிதியத்தின் செயலாளர் டொக்டர் தாரக லியனபத்திரன பொதுமக்களுக்கு அறிவித்துள்ளார். 

நாட்டில் கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடவும் தடுப்பூசி செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கும், நிதியத்துக்கு பங்களித்த நன்கொடையாளர்களுக்கு தனது பாராட்டுகளைத் தெரிவித்த அவர், காசோலைகள் மற்றும் பணத்தை நிதியத்துக்கு அனுப்புவதைத் தவிர்க்குமாறும் அறிவித்தார்.

220 கோடியே 71 இலட்சத்து 64 ஆயிரத்து 785 ரூபாய் 58 சதத்தை நிதியம் நன்கொடையாக பெற்றதுடன், 199 கோடியே 75 இலட்சத்து 69 ஆயிரத்து 456 ரூபாய் 56 சதம் செலவிடப்பட்டுள்ளது.

பிசிஆர் பரிசோதனைகள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள், தடுப்பூசித் திட்டங்கள், அவசர சிகிச்சை பிரிவுகளுக்கான கட்டில்கள் மற்றும் மருந்து கொள்வனவுக்கு மேற்குறிப்பிட்ட பணம் செலவிடப்பட்டுள்ளது.

மேலும், ஒக்டோபர் 18ஆம் திகதியன்று குறித்த நிதியில் 21 கோடியே 8 இலட்சத்து 77 ஆயிரத்து 431 ரூபாய் 05 சதம் மீதி காணப்படுவதுடன், சத்திரசிகிச்சை மற்றும் மருத்துவ உதவிக்கான ஜனாதிபதி நிதியத்தில் அந்தப் பணம் வரவு வைக்கப்பட்டுள்ளது என, அறிவிக்கப்பட்டுள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd