web log free
April 27, 2025
kumar

kumar

கொழும்பு நகரில் நாளாந்தம் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக பத்தரமுல்லை தியத்த உயன மற்றும் அக்கொன ஹெயினடிகும்புர முதல் வெள்ளவத்தை வரை சூரிய மின்கலங்கள் மூலம் செயற்படுத்தப்படும் சுற்றுச்சூழலுக்கு உகந்த பயணிகள் படகு சேவை கடந்த 23ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.

நில மீட்பு மற்றும் மேம்பாட்டுக் கழகம் மற்றும் ஜென்சோ பவர் டெக்னாலஜி பிரைவேட் லிமிடெட் இணைந்து இந்த சுற்றுச்சூழலுக்கு உகந்த பயணிகள் படகுச் சேவையைத் தொடங்கியுள்ளன.

அங்கு உரையாற்றிய நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, இலங்கையில் சோலார் பேனல்கள் மூலம் இயக்கப்படும் முதலாவது படகு சேவை இந்த பயணிகள் படகு சேவையாகும் என குறிப்பிட்டார்.

சோலார் பேனல்கள் மூலம் இயக்கப்படுவதால் இது 100 சதவீதம் சுற்றுச்சூழலுக்கு உகந்தது என்றும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், எதிர்காலத்தில் கொழும்பு நகரின் உள்ளக நீர்வழிப் பாதைகளில் இவ்வாறான படகுச் சேவைகளை ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாகத் தெரிவித்த அமைச்சர், இதன் மூலம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கவரும் எனவும் தெரிவித்தார்.

சோலார் பேனல்கள் ஊடாக மின்சாரத்தை உற்பத்தி செய்வதன் மூலம் தற்போதைய எரிபொருள் பிரச்சினைக்கும் நாடு எதிர்நோக்கும் மின்சார நெருக்கடிக்கும் தீர்வு கிடைக்கும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

சோலார் பேனல்கள் மூலம் இயங்கும் இந்தப் படகுகள் ஓடும்போது சத்தம் எழுப்பாது, எரிபொருளை உட்கொள்ளாது. நீர்வாழ் தோட்டத்தில் சுற்றித் திரியும் நீர்வாழ் விலங்குகள் மற்றும் பறவைகளின் வாழ்க்கைச் சுழற்சி தொந்தரவு செய்யாது.

பத்தரமுல்லை நீர் பூங்கா மற்றும் ஹெயினடிகும்புரவிலிருந்து வெள்ளவத்தை வரை இந்தப் படகுகள் 30 நிமிடங்களுக்குள் சென்றடைய முடியும்.

மேலும், பத்தரமுல்லையில் இருந்து வெள்ளவத்தை வரை ஒரு நபருக்கு 200 ரூபாவும், அகோன, ஹெயினடிகும்புர முதல் வெள்ளவத்தை வரை ஒரு நபருக்கு 300 ரூபாவும் அறவிடப்படுகிறது.

இந்த படகு சேவையானது தினசரி அலுவலக நேரங்களில் இயங்கும் மற்றும் ஒரு படகில் 8 பேர் பயணம் செய்வதற்கான போக்குவரத்து வசதிகளை வழங்குகிறது.

மேலும், பத்தரமுல்லை மற்றும் அதனை அண்மித்துள்ள அரச மற்றும் தனியார் அலுவலகங்கள், கேட்வே சர்வதேச பாடசாலை, நாவல திறந்த பல்கலைக்கழகம், 176 பஸ் பாதை, 138 மற்றும் 122 பஸ் பாதைகள், வெள்ளவத்தை புகையிரத நிலையம் ஆகிய இடங்களுக்கு இந்த படகு சேவை மூலம் இலகுவாக சென்றடைய முடியும்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்கு விஜயம் செய்துள்ள நிலையில், ஜனாதிபதி வெளிநாட்டில் இருக்கும் சமயத்தில் பணியாற்றுவதற்காக, தனக்குக் கீழ் உள்ள அமைச்சுக்களுக்கு பதில் அமைச்சர்களை நியமித்துள்ளார்.

குறித்த அமைச்சுக்களின் இராஜாங்க அமைச்சர்களே இவ்வாறு பதில் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி, பதில் பாதுகாப்பு அமைச்சராக ராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன், நிதி பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை பதில் அமைச்சராக ராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, முதலீட்டு ஊக்குவிப்பு பதில் அமைச்சராக ராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம, தொழில்நுட்ப பதில் அமைச்சராக ராஜாங்க அமைச்சர் கனக ஹேரத், பெண்கள் சிறுவர் விவகாரம் மற்றும் சமூக வலுவூட்டல் பதில் அமைச்சராக ராஜாங்க அமைச்சர் அனுபா பெஸ்குவல் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மனைவி அயோமா ராஜபக்ஷவுக்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்து 10 இலட்சம் ரூபா கப்பம் கோரிய நபரை நேற்றைய தினம் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

இந்த நபர் கொலன்னாவ சாலமுல்ல பிரதேசத்தை சேர்ந்த கணேசன் யோகன் எனத் தெரிவிக்கப்படுகிறது.

மூன்று நாட்களாக தொலைபேசி ஊடாக பணம் கேட்டு மிரட்டியதாக குற்றப் புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது.

இந்த சந்தேகநபர் அயோமா ராஜபக்ஷவுக்கு 30 முறை அழைப்பு விடுத்துள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த அழைப்பு தவறுதலாக விடுக்கப்பட்டதாக கருதிய முன்னாள் கோட்டாபய ராஜபக்சவின் செயலாளர் ஒருவர் தகவல் கிடைத்ததும், தொலைபேசியில் அச்சுறுத்தல் விடுத்த நபருக்கு அழைப்பு எடுத்து உண்மைகளை விளக்கினார்.

இதுபற்றி அறிந்தே தான் இப்படி தொலைபேசி அழைப்பை மேற்கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

 

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்திலுள்ள வைத்தியர் ஒருவரின் வீட்டில் 10 கோழி , நாய் என்பற்றை தீருடிச்சென்ற உயர் தரத்தில் கல்வி கற்று வரும் 5 பாடசாலை மாணவர்களை கைது செய்து அவர்களது பெற்றோரை வரவழைத்து அவர்களை எச்சரித்து விடுவித்துள்ள சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை (25) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

வைத்தியரின் வீட்டில் சம்பவதினமான வெள்ளிக்கிழமை இரவு உள்நுழைந்த 5 மாணவர்கள் வீட்டின் பின்பகுதியில் அமைந்துள்ள கோழிக் கூட்டில் இருந்த 10 கோழிகளை திருடிக் கொண்டிருந்த போது அங்கு வந்த நாய் ஒன்றையும் திருடிக்கொண்டு தப்பி ஓடியுள்ளனர்.

இது தொடர்பாக வைத்தியர் பொலிஸாருக்கு முறைப்பாடு தெரிவித்ததையடுத்து பொலிஸார் மேற்கொண்டுவந்த விசாரணையில் வைத்தியரின் வீட்டுக் கோழிகளை திருடிச் சென்ற பாடசாலை ஒன்றில் உயர்தரம் கற்றுவரும் 5 மாணவர்களை கைது செய்தனர்.

வைத்தியர் அவர்களை மன்னித்துவிடுமாறு கோரியதையடுத்து மாணவர்களின் பெற்றோரை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து கைது செய்யப்பட்ட மாணவர்களை எச்சரித்து பிள்ளைகளை கவனிக்குமாறு பெற்றோருக்கு அறிவுரை கூறி விடுவித்துள்ளதாக தெரிவித்தனர். 

சீன ஜனாதிபதி பதவியில் இருந்தும், சீன மக்கள் விடுதலை ராணுவத்தின் (பிஎல்ஏ) தலைவர் பதவியில் இருந்தும் ஜி ஜின்பிங் நீக்கப்பட்டுள்ளார் என்று சமூக ஊடகங்களில் செய்திகள் உலா வருகின்றன. எனினும், சீன அரசு இதை உறுதி செய்யவில்லை.

இந்திய-சீன எல்லையில் இரு தரப்பு ராணுவத்துக்கும் இடையே மோதல் சூழல் ஏற்பட்டு, நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பின்னர், முக்கிய நிலைகளில் இருந்து சீன ராணுவம் பின்வாங்கியுள்ளது. இதனால், எல்லையில் பதற்றம் சற்று தணிந்துள்ளது.

சமீபத்தில் உஸ்பெகிஸ்தானின் சாமர்கண்ட் நகரில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில், சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், இந்தியப் பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புதின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், சீனாவின் மக்கள் விடுதலை ராணுவத் தலைவர் பதவியில் இருந்து ஜனாதிபதி ஜி ஜின்பிங் நீக்கப்பட்டு விட்டார் என்ற தகவல் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவுகிறது. அதேபோல, சீன மக்கள் பலர் தங்கள் ட்விட்டரில் "அதிபர் ஜி ஜின்பிங் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்" என்ற தகவலைப் பகிர்ந்துள்ளனர்.

பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமியும் இந்த தகவலை தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

பிஎல்ஏ அமைப்பின் முழுக் கட்டுப்பாட்டில் ராணுவம் உள்ளதாகவும், சீனாவின் அதிபராக லீ கியாமிங் நியமிக்கப்பட்டுள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சீன ராணுவத்தின் வாகனங்கள் கடந்த 22-ம் தேதியே தலைநகர் பெய்ஜிங் நோக்கிச் செல்லத் தொடங்கின என்றும், ஹூவான்லாய் மாகாணத்திலிருந்து, ஹெபே மாகாணத்தின் ஜாங்கியாகோ நகர் வரை 80 கி.மீ. தொலைவுக்கு ராணுவ வாகனங்கள் அணிவகுத்து நிற்பதாகவும் கூறப் படுகிறது.

ஜெனிபர் ஜெங் என்பவர் தனது ட்விட்டர் பதிவில், "சீனா கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், அதிபருமான ஜி ஜின்பிங்கை சீன மக்கள் விடுதலை ராணுவத் தலைவர் பதவியில் இருந்து நீக்கிவிட்டதால், அவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்’’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

சீனாவில் 2 மூத்த அமைச்சர்களுக்கு மரண தண்டனையும், 4 அதிகாரிகளுக்கு ஆயுள் தண்டனையும் இந்த வாரம் விதிக்கப்பட்டது. இவர்கள் சீன அதிபருக்கு எதிராக அரசியல் பிளவை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால், ஜி ஜின்பிங்குக்கு எதிராகச் செயல்படுபவர்கள், அவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்ற தகவலை பரப்புவதாகக் கூறப்படுகிறது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று (25) இரவு ஜப்பான் செல்லவுள்ளார்.

ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்ஷோ அபேயின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக அவர் இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உட்பட 217 நாடுகளைச் சேர்ந்த சுமார் 700 அதிதிகள் இறுதிச் சடங்குகளில் பங்கேற்பார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பானில் தங்கியுள்ள காலப்பகுதியில் ரணில் விக்கிரமசிங்க ஜப்பானின் புதிய பிரதமர் மற்றும் பல உயர்மட்ட தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

வௌவால்கள் மத்தியில் பரவி, வௌவால்களிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் புதிய வைரஸ் குறித்து அமெரிக்க விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

Khosta-2 என பெயரிடப்பட்டுள்ள இந்த வைரஸ், மனித உயிரணுக்களை வேகமாகப் பாதிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. வைரஸுக்கு மருந்து இல்லை.

கோஸ்டா 2 வைரஸ் ரஷ்யாவில் 2000ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. 

இருப்பினும், இந்த வைரஸ் மனிதர்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் நம்பவில்லை.

'கோவிட்-19' வைரஸ் பரவியதன் மூலம் அமெரிக்க விஞ்ஞானிகள் கோஸ்டா 2 வைரஸ் மீது அதிக கவனம் செலுத்தினர்.

அதன்படி கடந்த சில மாதங்களில் இந்த புதிய வைரஸ் தொடர்பாக அமெரிக்க விஞ்ஞானிகள் பல ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர்.

சவூதி அரேபியாவின் 92வது தேசிய தின கொண்டாட்டம் நேற்று (23) பிற்பகல் கொழும்பு ஷங்ரிலா ஹோட்டலில் வெகு விமரிசையாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில் பிரதமர் தினேஷ குணவர்தன, சபாநாயகர் மஹிந்த யாப்பா, ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்க மற்றும் பிரசித்திபெற்ற அதிதிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் விசேட அதிதியாக கலந்து கொண்டமையே இந்த தேசிய தின நிகழ்வின் விசேட அவதானமாகும்.

முஸ்லீம் தீவிரவாதத்த்திற்கு எதிராக கடுமையாகச் செயல்பட்டு, சவுதி அரேபிய அமைப்புகளை பல சந்தர்ப்பங்களில் கடுமையாக விமர்சித்து வந்த ஞானசார தேரரின் வருகை பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது என்பது சமூக வலைதளங்களை அவதானித்தால் தெளிவாகிறது.

பொதுபல சேனா அமைப்பின் செயற்பாடுகளில் இருந்து பல வருடங்களாக விலகியிருந்த அதன் பிரதம நிறைவேற்று அதிகாரி விரிவுரையாளர் டிலந்த விதானகேயும் ஞானசார தேரருடன் இணைந்து தனது மனைவியுடன் இந்த தேசிய தின நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.  

இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு எதிராக சவுதி இளவரசர் சல்மான் மிதமான கொள்கையை கடைபிடித்து வரும் நிலையில், சவுதி தூதரக துறைகள் பல்வேறு அணுகுமுறைகளுடன் செயல்படுகின்றன என்ற முடிவுக்கு பொதுபல சேனா அமைப்பு வந்துள்ளது.

இதன்படி, ஞானசார தேரர் தலைமையிலான பொதுபல சேனா அமைப்பின் பிரதிநிதிகளுக்கும், சவுதி அரேபிய தூதுவர் அதிகாரிகளுக்கும் இடையில் அண்மையில் பல சுற்றுக் கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. சர்வதேச ரீதியில் பௌத்த, முஸ்லிம் பிரச்சினைகளை ஆராய்ந்து பௌத்த – முஸ்லிம் நட்புறவை ஏற்படுத்துவதற்கு முன்னின்று செயற்படுமாறு சவூதி அரேபிய இராஜதந்திர திணைக்களங்கள் ஞானசார தேரரைக் கேட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு மாவட்டத்தில் உள்ள அதி முக்கியமான இடங்கள் அதி உயர் பாதுகாப்பு வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருக்கிறது.

இதன்படி பாராளுமன்ற கட்டடத் தொகுதி மற்றும் அதனை அண்மித்த பகுதிகள், புதுக்கடை நீதிமன்ற தொகுதியில் உயர்நீதிமன்றம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகள், ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகையில், கடற்படை தலைமையகம், பொலிஸ் தலைமையகம், பாதுகாப்பு அமைச்சு மற்றும் இராணுவ தலைமையகம் பிரதமர் அலுவலகம், அலரிமாளிகை மற்றும் அதனை அண்மித்த பகுதிகள் பாதுகாப்பு செயலாளர் மற்றும் முப்படை தளபதிகளின் உத்தியோகபூர்வ வாசஸ்தலங்கள் இருக்கும் பகுதிகள் அதிவுயர் பாதுகாப்பு வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. 

 

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் எழுபத்தேழாவது அமர்வை முன்னிட்டு ஏற்பாடு செய்திருந்த இரவு விருந்தில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மற்றும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் ஆகியோருக்கு இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, நியூயார்க்கில் பல அமைச்சர்கள் அளவிலான கூட்டங்களில் பங்கேற்க உள்ளார். 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd