web log free
April 28, 2025
kumar

kumar

அரசாங்கத்துடன் இணைந்து அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக் கொண்ட எம்.பிக்களின் கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தயாராகி வருவதாக அறியமுடிகிறது.

அவர்களை கட்சியின் பதவிகளில் இருந்து நீக்கிவிட்டு குற்றப் பத்திரிகையை சமர்ப்பித்து கட்சியின் உறுப்புரிமையை இடைநிறுத்த திட்டமிட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சுதந்திரக் கட்சி உறுப்பினர்களின் விசேட கலந்துரையாடலொன்று கட்சி தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தலைமையில் அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்ற போதே, இது குறித்து கலந்துரையாடப்பட்டதாக தெரியவருகிறது.

அமைச்சரவை அமைச்சர்களாக நியமிக்கப்பட்ட நிமல் சிறிபால டி சில்வா மற்றும் மஹிந்த அமரவீர ஆகியோர் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர்களாகவும், இராஜாங்க அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொண்ட லசந்த அழகியவன்ன கட்சியின் பொருளாளராகவும் செயற்படுகின்றனர். 

அத்துடன், கட்சி உறுப்பினர்களான சாமர சம்பத் தசநாயக்க மற்றும் ஜகத் புஷ்பகுமார ஆகியோர் பிரதிச் செயலாளர்களாக பணியாற்றி வருகின்றனர் என்பதுடன், அவர்கள் தமது பதவிகளில் நீக்கப்படுவார்கள் என தெரியவருகிறது.

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாளை (17) ஐக்கிய இராச்சியத்திற்கு (UK) செல்லவுள்ளார்.

சனிக்கிழமை அதிகாலை இலங்கையிலிருந்து புறப்படும் ஜனாதிபதி, திங்கட்கிழமை (19) லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்தில் நடைபெறும் இறுதிச் சடங்குகளில் பங்கேற்கவுள்ளார்.

இங்கிலாந்தின் மிக நீண்ட காலம் மன்னராக இருந்த ராணி இரண்டாம் எலிசபெத் 70 ஆண்டுகள் ஆட்சி செய்த பின்னர் 96 வயதில் பால்மோரலில் இறந்தார்.

கடந்த வாரம் (08) தனது ஸ்காட்டிஷ் தோட்டத்தில் கோடை காலத்தின் பெரும்பகுதியை கழித்த அவர் நிம்மதியாக இறந்தார்.

மறைந்த ராணியின் நினைவாக அரச நிறுவனங்கள் மற்றும் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ள நிலையில், திங்கட்கிழமை துக்க தினமாக இலங்கை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

USAID நிர்வாகி சமந்தா பவர் சமீபத்திய விஜயத்தின் தொடர்ச்சியாக, அமெரிக்காவானது USAID ஊடாக இலங்கைக்கு மேலதிகமாக 65 மில்லியன் டொலர்களை (23 பில்லியன் இலங்கை ரூபாவிற்கும் அதிகமாக) ஒரு ஐந்தாண்டு காலப்பகுதியில் உதவியாக வழங்கும் என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங் இன்று அறிவித்தரர்.

 

கஞ்சா என்பது எமது வரலாற்றுடன் இணைந்த ஒன்று எனவும் அதனை நாம் நல்ல  மனப்பான்மையுடன் பார்க்க வேண்டும் எனவும் சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்துள்ளார்.

கஞ்சாவை ஏற்றுமதி செய்வதன் ஊடாக  நிறைய அந்நிய செலாவணி சம்பாதிக்க முடியும், ஆனால் தெருக்களில் கஞ்சா புகைக்கக்கூடாது என்று அவர் கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், வரலாற்றின் மன்னர்கள் கூட கஞ்சா பயன்படுத்தியதாகவும், ராவணன் காலத்திலிருந்தே கஞ்சா பயன்படுத்தப்பட்டதாகவும் கூறினார்.

நாடும் அரசாங்கமும் வங்குரோத்து நிலையிலுள்ள இவ்வேளையில் அரச அதிகாரம் இன்றி, ´மூச்சு´ த்திட்டத்தினையும், ´பிரபஞ்சம்´ தகவல் தொழிநுட்பத் திட்டத்தினையும் நிறைவேற்றுவது குடிமக்கள் என்ற வகையில் இது சமூகக் கடமையும் பொறுப்புமாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ நேற்று (15) அம்பாறையில் தெரிவித்தார்.

74 ஆண்டுகால அரசியல் குறித்து மக்கள் மத்தியில் நிலவும் விரக்தி நியாயமானதுதான் என்றாலும், தான் உட்பட ஐக்கிய மக்கள் சக்தி எதிர்க்கட்சியில் இருந்த வன்னம் அரசாங்கத்தை மட்டும் விமர்சிக்காமல், மக்களை வாழவைக்கவும், எதிர்கால சந்ததியினரின் கல்விக்கான வாய்ப்புகளை விரிவுபடுத்தவும் நடவடிக்கைளை முடிந்தவரை எடுத்து வருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

நாட்டின் குடிமக்களை வாழ வைப்பது தன் மீது சுமத்தப்பட்ட சமூகக் கடமை எனவும், நாடு நெருக்கடியான சூழலை எதிர்நோக்கி வரும் இந்நேரத்தில் அமைச்சுகளைப் பெற்று, மக்களுக்கு மேலும் சுமைகளை அதிகரிப்பதை விடுத்து, எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு நாட்டு மக்களுக்கு வழங்க முடியுமான உயர்ந்த பட்ச உதவிகளை வழங்குவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.

நாட்டின் வைத்தியசாலைக்கட்டமைப்பு நெருக்கடியை எதிர்நோக்கும் இத்தருணத்தில், ´மூச்சு´ வேலைத்திட்டத்தின் ஊடாக நாட்டு மக்களின் உயிரைக் காக்க எதிர்க்கட்சியாக தானும் தனது பாராளுமன்ற உறுப்பினர் குழுவும் எப்போதும் முன் நிற்பதாகவும் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

தற்போதைய ஜனாதிபதி பிரதமராக இருந்த போது நாட்டைக் கட்டியெழுப்ப உதவுமாறு கேட்ட சந்தர்ப்பத்தில் பதவிகளை எடுக்காமல் சுகாதாரம், கல்வித்துறைகளை கட்டியெழுப்ப உதவுவதாக தான் உறுதியளித்ததாகவும் தெரிவித்தார்.

சுகாதாரத் துறைக்கு மூச்சுத் திட்டமும், கல்வித் துறைக்கு பிரபஞ்சம் தகவல் தொழில்நுட்பத் திட்டமும் தொடங்கப்பட்டு, இதனூடாக எதிர்க்கட்சி என்ற ரீதியிலும் தனது கடமைகளையும் பொறுப்புகளையும் நிறைவேற்றுவதாகவும் அவர் தெரிவித்தார்.

அமைச்சர்களுக்காக ஒதுக்கப்பட்ட பணத்தை சுகாதாரத் துறைக்கு பயன்படுத்துவதன் மூலம் பல உயிர்கள் காப்பாற்றப்படும் எனவும், ஐக்கிய மக்கள் சக்தி எதிர்க்கட்சியாக, குறைந்த செலவில் அதிக வேலைகளைச் செய்து தமது சமூகப் பொறுப்பை நிறைவேற்றுவதையே இந்நேரத்தில் மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியினால் அமுல்படுத்தப்படும் ´மூச்சு´ வேலைத்திட்டத்தின் 52 ஆவது கட்டமாக அம்பாறை பொது வைத்தியசாலைக்கு 35 இலட்சம் ரூபா (ரூ.3,500,000) பெறுமதியான Dialysis இயந்திரமொன்றை நன்கொடையாக வழங்கும் நிகழ்வில் நேற்று(15) கலந்து கொண்டு உரையாற்றும் போதே சஜித் பிரேமதாஸ மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதற்கு முன்னர் 51 கட்டங்களில், 1562 இலட்சம் (ரூ.56,216,900) மதிப்பிலான மருத்துவமனை உபகரணங்களை ´மூச்சு´திட்டத்தின் மூலம் வழங்க ஐக்கிய மக்கள் சக்தியால் முடிந்துள்ளது.

சர்வதேச  அமெரிக்க முகவரகத்தின் நிர்வாகி சமந்தா பவரின் அண்மைய இலங்கை பயணத்தின் அடிப்படையில், ஐந்தாண்டு காலத்துக்கு இலங்கைக்கு மேலதிகமாக 65 மில்லியன் டொலர்களை வழங்குவதாக அமெரிக்க தூதுவர் அறிவித்துள்ளார்.

இந்த நிதியானது இலங்கையின் தற்போதைய பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளுக்காக, கடந்த வாரம் சமந்தா பவர் அறிவித்த புதிய மனிதாபிமான மற்றும் உர உதவியான 60 மில்லியன் டொலர்களுக்கு மேலதிகமாக வழங்கப்பட்டுள்ளது என அமெரிக்க தூதரகம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவர் நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் கேப்ரியல் கிராவ் மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்த்தன ஆகியோர் இது தொடர்பான உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளனர். 

மருந்துப் பற்றாக்குறைக்கு மேலதிகமாக சில வைத்தியசாலைகளில் நோயாளர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் தினசரி உணவைப் பெற்றுக் கொள்வது பாரிய பிரச்சினையாக மாறியுள்ளதாக அகில இலங்கை தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது.

சத்துணவு வழங்குவோருக்கு முறையான பணம் வழங்கப்படாததால், மருத்துவமனைகளுக்கு உணவு, பழங்கள், சூப், கஞ்சி தயாரிக்க தேவையான மூலப்பொருட்கள், முட்டை, இறைச்சி, மீன் உள்ளிட்டவை மட்டுப்படுத்தப்பட்டதாக சங்கத்தின் தலைவர் எஸ்.பி.மெதவத்த குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் மிகப் பெரிய வைத்தியசாலையான கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும் இந்தப் பிரச்சினை உள்ளதாகத் தெரிவித்த அவர், நோய்களைக் குணப்படுத்தும் வகையில் நோயாளர்களுக்கு சத்தான உணவுடன் மருந்துகளும் வழங்கப்பட வேண்டும் என்றார்.

இந்த நிலையில் அதிகாரிகள் கவனம் செலுத்தி விநியோகஸ்தர்களுக்கு நிலுவைத் தொகையை வழங்கி நிலைமையை கட்டுப்படுத்த வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

இந்நாட்டில் காலணிகளின் விலை பெருமளவில் அதிகரித்துள்ளதால், சில காலணி வியாபாரிகள் தவணை முறையில் பணம் செலுத்தும் வகையில் காலணிகளை விற்பனை செய்கின்றனர்.

இணையத்தில் விளம்பரங்களை வெளியிடுவதன் மூலம், அவர்கள் காலணிகளை தவணை முறையில் பெறலாம் என்று வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்கின்றனர். 

இலங்கையில் அந்த அளவிற்கு நிலைமை மோசமடைந்துள்ளது. 

பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்ட தெற்காசியாவிலேயே மிக உயரமான கட்டிடத்தை பார்வையிடுவதற்கான டிக்கட் விற்பனை மூலம் நேற்று ஒரு மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான வருமானம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, முதல் நாள் வருமானம் 15 லட்சம் ரூபாவை அண்மிக்கும் என தாமரைக் கோபுர தனியார் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார்.

இதேவேளை, நேற்று 2612 பேர் கொண்ட குழுவொன்று தாமரைக் கோபுரத்தை பார்வையிட வந்துள்ளதாகவும் அவர்களில் 21 வெளிநாட்டவர்கள் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு பேர வாவிக்கு அருகில் 30,600 சதுர மீற்றர் பரப்பளவில் நிர்மாணிக்கப்பட்ட தாமரைக் கோபுர கட்டிடம் நேற்று முதல் பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.

அதன்படி வார நாட்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 11 மணி வரையிலும், வார இறுதி நாட்களில் பகல் 12 மணி முதல் இரவு 12 மணி வரையிலும் தாமரைக் கோபுரத்தை தரிசிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

நீர் கட்டணத்தை செலுத்தாத பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளுக்கான நீர் விநியோகத்தை துண்டிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கான ஆலோசனை கிடைத்துள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

நீர் கட்டணங்களை செலுத்தாத பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்ப் பட்டியலை சபாநாயகருக்கு இன்று(15) அனுப்பவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் வர்த்தகப் பிரிவின் பிரதி பொது முகாமையாளர் பியல் பத்மநாத தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர்களால் சுமார் 3 மில்லியனுக்கும் அதிக கட்டணம் செலுத்தப்பட வேண்டியுள்ளதாக அவர் இதன்போது கூறியுள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd