Homeவணிக செய்திவெளிநாட்டு கையிருப்பு வீழ்ச்சி

வெளிநாட்டு கையிருப்பு வீழ்ச்சி

spot_img

நாட்டின் வெளிநாட்டு கையிருப்பு கடந்த மே மாதத்துடன் ஒப்பிடுகையில் ஜூன் மாதத்தில் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மத்திய வங்கியின் அறிக்கையின்படி, கடந்த மே மாதத்தில் நாட்டின் மொத்த கையிருப்பு 6,881 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்த நிலையில், ஜூன் மாதத்தில் அது 6,450 மில்லியன் அமெரிக்க டொலர்களாகக் குறைந்துள்ளது. இது மே மாதத்துடன் ஒப்பிடுகையில் 431 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வீழ்ச்சியாகும். 

அந்நியச் செலாவணி மற்றும் தங்கக் கையிருப்பு குறைந்தமையே இந்த வீழ்ச்சிக்குக் காரணம் என மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது. 

இதன்படி, கடந்த மே மாதத்தில் 6,661 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்த வெளிநாட்டு கையிருப்பு, ஜூன் மாதத்தில் 407 மில்லியன் டொலர்கள் குறைந்து 6,254 மில்லியன் அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது. 

மேலும், தங்கக் கையிருப்பிலும் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக மத்திய வங்கியின் அறிக்கை குறிப்பிடுகிறது. 

மே மாதத்தில் 216 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்த தங்கக் கையிருப்பு, ஜூன் மாதத்தில் 191 மில்லியன் அமெரிக்க டொலர்களாகக் குறைந்துள்ளது 

அதன்படி, மே மாதத்துடன் ஒப்பிடுகையில் நாட்டின் தங்க இருப்பில் குறிப்பிடத்தக்க சரிவு ஏற்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_img

Latest articles

மட்டக்களப்பு மகாவலி காணிகளை சிங்கள விவசாயிகளுக்கு பகிர்ந்தளித்த கோட்டா

மட்டக்களப்பு மாவட்டத்தில் மகாவலி காணிகளைச் சிங்கள விவசாயிகளுக்கு பகிர்ந்தளிப்பதற்கு எதிராக 2021ஆம் ஆண்டு தாம் மேன்முறையீட்டு நீதிமன்றத்தை நாடியதாகத்...

சமூக ஊடகங்களில் போலித் தகவல்களைப் பரப்புவோருக்கு எதிராகக் கடும் சட்ட நடவடிக்கை

– பொலிஸார் எச்சரிக்கை சமூக ஊடகங்கள் ஊடாகப் பொய்யான மற்றும் உறுதிப்படுத்தப்படாத தகவல்களைப் பரப்பி, பொதுமக்களைத் தவறாக வழிநடத்துவதுடன்...

கைதி பிக்குகள் சிறைக்கு வெளியே அழைத்துச் செல்லப்படும் போது காவி உடை அணிய அனுமதி!

சிறைத்தண்டனை அனுபவித்து வரும் பௌத்த பிக்குகள், சிறைச்சாலைக்கு வெளியே அழைத்துச் செல்லப்படும் சந்தர்ப்பங்களில் காவி உடையை அணிவதற்கு அனுமதிக்க...

அனோஜனின் மரண தண்டனை இரத்து

இலங்கையர் அனோஜன் சிவராசாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை சவூதி அரேபிய உயர் நீதிமன்றம் இரத்துச் செய்துள்ளதாக இலங்கைப் பிரதி...

More like this

வியட்நாம் ஏர்லைன்ஸ் கொழும்பு – ஹோ சி மின் நகருக்கு நேரடி விமான சேவையை ஆரம்பிக்கிறது

வியட்நாம் ஏர்லைன்ஸ் எதிர்வரும் 16ஆம் திகதி இரவு முதல், ஹோ சி மின் நகருக்கும் கொழும்புக்கும் இடையில் புதிய...

ஸ்கோலியோசிஸ் அறுவைச் சிகிச்சை முன்னேற்றங்கள் மற்றும் இலங்கை நோயாளிகளுக்கான உதவி 

ஊடக அறிக்கை  கொழும்பு – இந்தியாவின் Baby Memorial Hospital (BMH) மருத்துவர்கள், நேரடி நரம்பு கண்காணிப்பு, அறுவைச் சிகிச்சை வழிகாட்டி...

ஏசியன் பெயிண்ட்ஸ் கோஸ்வேயின் ‘Royale INFINITY’இலங்கைச் சந்தையில் அறிமுகம்

-ஆடம்பர உட்சுவர் வர்ணப் பூச்சுகளுக்கு புதிய பரிமாணம் வழங்கும் ஏசியன் பெயிண்ட்ஸ் கோஸ்வேயின் 'Royale INFINITY' இலங்கைச் சந்தையில் அறிமுகம் இலங்கையின் முன்னணி...