Homeஉள்நாட்டு செய்திEPF சட்டத்தைத் திருத்த அமைச்சரவை ஒப்புதல்

EPF சட்டத்தைத் திருத்த அமைச்சரவை ஒப்புதல்

spot_img

ஓய்வூதியத்திற்கு தகுதி இல்லாத தனியார் மற்றும் அரைஅரசுத் துறைகளில் பணியாற்றும் ஊழியர்களின் சமூகப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்ட 1958ஆம் ஆண்டின் 15ஆம் இலக்க ஊழியர் சேமலாப நிதி (EPF) சட்டத்தை திருத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

தற்போது, இச்சட்டத்திற்கான பொது நிர்வாக நடவடிக்கைகள் தொழிலாளர் ஆணையாளர் நாயகத்தின் கீழ் முன்னெடுக்கப்படுகின்றன. அதேவேளை, இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை, ஊழியர் சேமலாப நிதியின் அறங்காவலராக செயல்பட்டு வருகிறது.

இதுவரை சட்டத்தின் சில பிரிவுகள் காலத்திற்கேற்ப திருத்தப்பட்டிருந்தாலும், தற்போதைய சமூக, பொருளாதார மற்றும் தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்ப உறுப்பினர்கள் எதிர்நோக்கும் சிக்கல்களை குறைத்து, மேலும் தரமானதும் திறமையானதுமான சேவையை வழங்கும் வகையில் சட்டத்தை மேலும் திருத்த வேண்டிய அவசியம் அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதற்கமைய, இலங்கை மத்திய வங்கி முன்வைத்த பரிந்துரைகளையும் கருத்தில் கொண்டு, தொழிலாளர் திணைக்களம் ஆரம்ப சட்ட வரைவை தயாரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அந்த ஆரம்ப வரைவை அடிப்படையாகக் கொண்டு, ஊழியர் சேமலாப நிதி (EPF) சட்டத்தைத் திருத்தும் சட்டமூலத்தை தயாரிக்க சட்ட வரைவு தயாரிப்பாளருக்கு ஆலோசனை வழங்குவதற்காக தொழிலாளர் அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

spot_img

Latest articles

நீதித்துறையுடன் விளையாடக்கூடாது – சாலிய பீரிஸ் எச்சரிக்கை

தற்போதைய அரசாங்கத்திற்கு ஒருநாள் 22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக இவ்வளவு கடுமையான எதிர்ப்பு ஏன் எழுந்துள்ளது என்பது புரியும்...

நீதியமைச்சரின் கருத்து நீதித்துறையின் சுயாதீனம் குறித்து பாரிய கேள்விகளை எழுப்புகிறது

22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பாக நீதியமைச்சர் ஹர்ஷண நாணாயக்கார வெளியிட்டுள்ள கருத்து, நாட்டின் நீதித்துறை அமைப்பின் சுயாதீனம் தொடர்பில்...

ரணிலின் ஆதரவில் சஜித் ஜனாதிபதி ஆவார்!

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஒரே அரசியல் அணியிலிருந்து இரு வேட்பாளர்கள் போட்டியிட்டதே தோல்விக்கான பிரதான காரணமாக அமைந்ததாகவும், மீண்டும்...

மஹிந்த லஞ்ச வாங்கிய காசோலை இலக்கம் எங்கே?

தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் வெளியிட்ட எந்தவொரு அறிவிப்பையும் வாக்குறுதியையும் இதுவரை நிறைவேற்றத் தவறியுள்ளது என முன்னாள்...

More like this