Homeஉள்நாட்டு செய்திஅரசாங்க தரப்பு தமிழ் பேசும் எம்பீக்களின் நடவடிக்கை குறித்து மனோ கடும் விசனம்!

அரசாங்க தரப்பு தமிழ் பேசும் எம்பீக்களின் நடவடிக்கை குறித்து மனோ கடும் விசனம்!

spot_img

சாப்பிட” மட்டும் தான் வாய் திறப்பதாக குற்றச்சாட்டு

எல்லா இன மக்களின் ஆதரவை பெற்ற ஜனாதிபதி இருக்கிறார்; 159 பேர் கொண்ட பாராளுமன்ற பெரும்பான்மை இருக்கிறது; இது இரண்டும் சேர்ந்தது தான் அரசு தரப்பு.

இதற்கு மேல், அமைச்சரவை, பிரதமர், சுகாதார அமைச்சர், தமிழ் பேசும் அமைச்சர்கள், எம்பீக்கள் என்று இருக்கிறார்கள். இவை எல்லாமும் சேர்ந்தது தான், அரசாங்கம்.

இத்தகைய அரசு தரப்பு, அரசாங்கம், தமது அதிகாரத்தை பயன்படுத்த படுத்தி, பிரச்சினைகளுக்கு தீர்வு காண அரசாங்கம் தவறுகிறதா? இன்னமும் தாம் எதிரணியில் இருப்பதாக ஜேவிபி நினைக்கிறதா? என்ற கேள்வியை எழுப்ப விரும்புகிறேன் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் கேள்வி எழுப்பி உள்ளார்.

மனோ எம்பி மேலும் கூறியுள்ளதாவது;

இந்த அரசாங்கத்திடம் தான் அதிகாரம் இருக்கிறது. இந்த அதிகாரத்தை பயன்படுத்தி, தொடர்புள்ள எல்லோரையும், மாவட்ட செயலகத்தில் கூட்டி, சுகாதார அமைச்சர், ஒரே நாளில் முடிக்க வேண்டிய பிரச்சினை தான் இந்த, கல்முனை சீருடை பிரச்சினை!

இதை செய்யாமல், தமிழ் பேசும் தரப்புகள் சமூக தளங்களில் அடித்து கொண்டு நாறட்டும், சாகட்டும், என ஆகஸ்ட் 8ம் திகதி முதல் சுமார் 10 நாட்களாக, காலம் கடத்தி, விட்டு, விட்டு, ளஇப்போது “தற்காலிக தீர்வு” என்ற ஒன்றை அறிவித்து இருக்கிறது, அரசாங்கம்.

இந்த நடவடிக்கைக்கு கூட ஏன் இத்தனை தாமதம்?

இதற்குள் எதிரணி முஸ்லிம் எம்பீக்கள் அமைச்சரை சந்தித்தது ஒரு புறம் இருக்க, ஆளும் #NPP அரசாங்க எம்பிக்கள் என்ன செய்தார்கள், இது வரை?

உண்மையில், #NPP அரசாங்க தமிழ், முஸ்லிம், கால்-அரை-முக்கால்- அமைச்சர்கள், எம்பீக்கள், வெளியே தத்தமது ஈழத்து-மலையக-முஸ்லிம்-தமிழ் மக்களிடம் சும்மா, சும்மா, வாய் சவடால் அடிக்கிறார்களே தவிர, உள்ளே “சாப்பிட” மட்டும் தான் வாய் திறக்கிறார்கள், என்ற உண்மையும், அரசாங்க அதிகார மையத்தின் பக்கத்தில் கூட, இவர்கள் எவருமே இல்லை என்ற நடப்பும், மீண்டும் நிரூபணம் ஆகியுள்ளன.

இதற்குள், “நாம் இலங்கையர்” என்ற வெற்று சமத்துவ கோஷம் வேறு! எல்லோருக்கும் அதிகாரம் இருந்தால் தான் “சமத்துவம்”! இது தான் உண்மை!

நான் அமைச்சராக இருக்கும் போது, அடிக்கடி, நான் அமைச்சரவையில், எழுப்பிய கூச்சல், மேசையில் அடித்த அடி, போட்ட சண்டை, என்பன என் ஞாபகத்தில் வந்து போகின்றன!

spot_img

Latest articles

யோஷித, கரன்னாகொட இருவருக்கும் குற்றப்பத்திரிகை தாக்கல்

யோஷித ராஜபக்ஸ மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட ஆகியோருக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டு வழக்கில் முக்கிய...

வனாதே சது கைது

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான கஞ்சிபானை இம்ரான் என்பவரின் நெருங்கிய சகாவாகக் கருதப்படும் வனாதே சது என்ற அவிஷ்க...

மக்கள் வாக்கெடுப்புக்கு செல்ல அரசாங்கம் தயார்

நீதித்துறை சீர்திருத்தங்கள் தொடர்பாக தேவையேற்பட்டால் மக்கள் வாக்கெடுப்பை நடத்துவதற்கு அரசாங்கம் தயாராக இருப்பதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இந்த...

அத்தியாவசியப் பொருட்களின் விலை மேலும் அதிகரிக்கும் அபாயம்

உலக நாடுகளை பாதித்துள்ள எல் நினோ காலநிலை நிலைமை மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழ்நிலை காரணமாக,...

More like this