இலங்கையர்களின் சராசரி ஆயுட்காலம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ள நிலையில், நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பது விஞ்ஞானபூர்வமானதும் தர்க்கரீதியானதுமான நடவடிக்கை என சுகாதார பிரதி அமைச்சர் வைத்தியர் ஹன்சக விஜேமுனி தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கையில் ஒருவரின் சராசரி ஆயுட்காலம் 60 ஆண்டுகளாக இருந்ததாகவும், தற்போது அது 80 ஆண்டுகளாக அதிகரித்துள்ளதாகவும் பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
மக்களின் ஆயுட்காலம் சுமார் 20 ஆண்டுகளால் அதிகரித்துள்ள நிலையில், சேவை காலத்தை மேலும் இரண்டு ஆண்டுகளால் நீடிப்பது மிகவும் நியாயமானது என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இது வெறுமனே அரசியல் ரீதியான தீர்மானம் அல்ல என்றும், விஞ்ஞானபூர்வமான அடிப்படையைக் கொண்ட விடயம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இரண்டு ஆண்டுகள் மட்டுமன்றி, சுமார் ஐந்து ஆண்டுகள் வரை சேவை காலத்தை நீடித்தாலும் அதில் தவறில்லை என வைத்தியர் ஹன்சக விஜேமுனி மேலும் தெரிவித்துள்ளார்.




