Homeஉலக செய்திநேபாளத்தில் பதறவைக்கும் களம்! உயிரிழப்பு 160 ஆக உயர்வு

நேபாளத்தில் பதறவைக்கும் களம்! உயிரிழப்பு 160 ஆக உயர்வு

spot_img

படத்தில் நீங்கள் பார்க்கும் அழகான பக்லிங் (Bhakling) கிராமம், திபெத் எல்லைக்கு அருகே நேபாளத்தின் ‘ரசுவா’ (Rasuwa) மாவட்டத்தில் போட்டே கோஷி ஆற்றுப் படுகையில் அமைந்திருந்த ஒரு சொர்க்க பூமி.

ஒரே நாளில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு, அந்த வண்ணமயமான நகரை இடிபாடுகள் நிறைந்த பாறை நிலப்பரப்பாக அடியோடு மாற்றிவிட்டது.

தற்போது வெளியாகி உள்ள அதிகாரப்பூர்வ தகவலின்படி, இந்தத் திடீர் வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 160 ஆக உயர்ந்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திபெத் பகுதியில் ஏற்பட்ட 4.4 ரிக்டர் நிலநடுக்கத்தால் நிலச்சரிவு ஏற்பட்டு, லெண்டே ஆற்றின் (Lhende River) பாதையில் பனி மற்றும் பாறை இடிபாடுகள் விழுந்து அடைபட்டன.

அந்த இயற்கை அணை நீர் அழுத்தம் தாங்காமல் உடைந்ததால் (Glacial / Avalanche Lake Burst) தான் இந்தத் திடீர் பேரழிவு ஏற்பட்டது.

தமிழர்களின் நிலை:
கும்பகோணம் டிராவல்ஸ் ஏஜென்சி மூலம் கயிலாய யாத்திரை சென்ற 57 தமிழர்களில் (தஞ்சாவூர், திருச்சி, கடலூர், மயிலாடுதுறை, ஓசூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள்), 20 பேர் நேபாள எல்லையோர போலீஸ் முகாமில் பாதுகாப்பாகத் தஞ்சம் அடைந்துள்ளனர்.

தொலைத்தொடர்பு கோபுரங்கள் சேதமடைந்துள்ளதாலும் பாதை தடைபட்டுள்ளதாலும் மற்ற பயணிகளைத் தொடர்பு கொள்ளும் முயற்சிகளில் நேபாள ராணுவ ஹெலிகாப்டர்களும், இந்தியத் தூதரகமும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

spot_img

Latest articles

அரசின் நிலைப்பாட்டில் மாற்றம்! பிக்குகள் தொடர்பான புதிய சட்ட விதிகள்..!

சிறை தண்டனை பெறும் பௌத்த பிக்குகள் தொடர்பான புதிய சட்ட விதிகள் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் நிறைவேற்றப்படவுள்ளதாகவும், அதற்கமைய...

இறுதிக் காலாண்டில் திட்டமிட்ட மின்வெட்டு?

இந்த ஆண்டின் நான்காவது காலாண்டில் (ஒக்டோபர், நவம்பர், டிசம்பர்) நீர்மின் உற்பத்தியை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளதாக தேசிய முறைமை இயக்குநர்...

எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் அனைத்து அரச ஊழியர்களுக்கும் சம்பள உயர்வு

– அமைச்சர் ஆனந்த விஜேபால எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக அனைத்து அரச ஊழியர்களுக்கும் சம்பள உயர்வு...

சபாநாயகர் பதவி விலகக்கூடும் என அரசியல் வட்டாரங்களில் பரபரப்பான பேச்சு!

சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக 50 குற்றச்சாட்டுகளைக் கொண்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை கொழும்பு: இலங்கைப் பாராளுமன்ற சபாநாயகர் வைத்தியர்...

More like this

ஜாவா கடற்பகுதியில் 243 பயணிகளுடன் கப்பல் விபத்து

இந்தோனேசியாவின் ஜாவா கடற்பகுதியில் 243 பயணிகளுடன் பயணித்த பயணிகள் கப்பல் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த...

கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள் மற்றும் இரும்புக்கு 50% வரி

கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து மோட்டார் வாகனங்கள், லொறிகள், வாகன உதிரிப் பாகங்கள் மற்றும் இரும்பு ஆகியவற்றுக்கு...

டொனால்ட் ட்ரம்பை படுகொலை செய்ய திட்டம்?

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை படுகொலை செய்ய ஈரான் திட்டமிட்டுள்ளதாகக் கூறி, கடந்த ஆண்டில் இஸ்ரேலிடமிருந்து அமெரிக்காவிற்குப் பல...