Homeஉள்நாட்டு செய்திசம்பள உயர்வு இல்லாததால் நாட்டை விட்டு வெளியேறும் அரச ஊழியர்கள்

சம்பள உயர்வு இல்லாததால் நாட்டை விட்டு வெளியேறும் அரச ஊழியர்கள்

spot_img

சம்பள உயர்வு வழங்கப்படாததால் வைத்தியர்கள், பொறியியலாளர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் அரச ஊழியர்கள் உள்ளிட்ட பெருமளவானோர் நாட்டை விட்டு வெளியேறி வருவதாக ஒன்றிணைந்த தொழிற்சங்க சம்மேளனத்தின் ஒருங்கிணைப்பாளர் ஆனந்த பாலித தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களை முறையாகப் பராமரித்திருந்தால் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை 50 முதல் 70 ரூபாய் வரை குறைக்க முடியும் என்ற போதிலும், அரசாங்கம் அதனைச் செய்யத் தவறியுள்ளதாக குறிப்பிட்டார்.

அதேவேளை, பேருந்து கட்டணங்களும் கோதுமை மா உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளதால் மக்கள் இரட்டிப்பு சுமையை எதிர்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில், அரசியலமைப்பு மறுசீரமைப்பு என்ற பெயரில் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதுடன், அவர்களுக்கான சம்பளத்தையும் உயர்த்த அரசாங்கம் திட்டமிட்டு வருவதாக ஆனந்த பாலித குற்றம் சாட்டியுள்ளார்.

spot_img

Latest articles

கேஸ் விலை குறைப்பு

இன்று நள்ளிரவு (05) முதல் லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்படுகிறது. புதிய விலை வருமாறு, 12.5 kg...

கைதான நாமல் விளக்கமறியலில்

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் இன்று (09) கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ எதிர்வரும்...

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கைது

முன்னாள் அமைச்சரான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சற்றுமுன்னர் இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.  வாக்குமூலம் ஒன்றை பெற்றுக்கொள்வதற்காக...

நாமல் ராஜபக்ஷவிடம் இலஞ்ச ஊழல் விசாரணை

இலங்கை பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவை இன்று (04) இலஞ்சம் அல்லது ஊழல்...

More like this