Homeஉள்நாட்டு செய்திமத்திய கிழக்கு மோதல்களால் தனியார் எரிபொருள் நிறுவனங்களின் விலைகள் திருத்தப்படுமா?

மத்திய கிழக்கு மோதல்களால் தனியார் எரிபொருள் நிறுவனங்களின் விலைகள் திருத்தப்படுமா?

spot_img

மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் காரணமாக எரிபொருள் இறக்குமதிக்கான செலவுகள் அதிகரித்துள்ள நிலையில், தனியார் எரிபொருள் நிறுவனங்களுக்கான எரிபொருள் விலைகளைத் திருத்துவது குறித்து அரசாங்கம் பரிசீலிக்கலாம் என எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.

தனியார் நிறுவனங்களுடன் மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தங்களின் அடிப்படையில், இவ்வாறான விலைத் திருத்தத்தை மேற்கொள்வதற்கு சட்டரீதியான தடைகள் எதுவும் இல்லை எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, மத்திய கிழக்கு மோதல்களால் கடல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால் இறக்குமதி செலவுகள் கணிசமாக அதிகரித்துள்ளதாகவும், தற்போதைய விலைகளில் எரிபொருளை விற்பனை செய்வது கடினமாகியுள்ளதாகவும் தனியார் எரிபொருள் நிறுவனங்கள் அரசாங்கத்திடம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

IOC, Sinopec மற்றும் RM Parks உள்ளிட்ட தனியார் எரிபொருள் விநியோக நிறுவனங்கள் இந்த விடயத்தை அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதாக சிரேஷ்ட அரச அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

எவ்வாறாயினும், தற்போதைய சூழ்நிலையில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) விற்பனை செய்யும் எரிபொருளின் அதிகரித்த செலவை முழுமையாக நுகர்வோர் மீது சுமத்த அரசாங்கம் எதிர்பார்க்கவில்லை எனவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

spot_img

Latest articles

ஏர்பஸ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ — நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு!

ஏர்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான பணமோசடி குற்றச்சாட்டின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில், நாமல் ராஜபக்ஷ சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ளதாக...

நாய் வளர்ப்போர் கவனத்துக்கு

வெறிநாய்க்கடி நோயை ஒழிப்பதற்கும், நாய்களைப் பதிவு செய்வதற்கும் புதிய சட்டமூலமொன்றை அறிமுகப்படுத்துவதற்கு பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும்...

பாடசாலைப் புத்தகங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள VAT வரி நீக்கம்

பாடசாலைப் புத்தகங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள பெறுமதி சேர் வரியை (VAT) நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார...

ஞானசார தேரருக்கு பொலிஸ் வலைவீச்சு

பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் வணக்கத்திற்குரிய கலகொடஅத்தே ஞானசார தேரர் தற்போது காணாமல் போயுள்ளதாக தகவல்கள்...

More like this