Homeஉள்நாட்டு செய்திதிருடர்களைப் பிடிப்பது மட்டும் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப போதாது – அமைச்சர் லால் காந்த

திருடர்களைப் பிடிப்பது மட்டும் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப போதாது – அமைச்சர் லால் காந்த

spot_img

கடந்த காலங்களில் இடம்பெற்ற மோசடிகள் மற்றும் ஊழல்களுக்கு எதிராக சம்பந்தப்பட்டவர்களை கைது செய்வது மட்டும் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு போதுமானதல்ல எனவும், அதேவேளை ஒட்டுமொத்த பொருளாதாரத்தையும் அரச பொறிமுறையையும் விரைவாக வலுப்படுத்த வேண்டும் எனவும் விவசாயம், கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால் காந்த தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

ஆட்சிக்கு வந்த அரசாங்கம் ஊழலில் ஈடுபடாமல் இருப்பதுடன், கடந்த காலங்களில் இடம்பெற்ற பாரிய ஊழல் மோசடிகளுடன் தொடர்புடையவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதும் மக்கள் ஆணையின் முக்கிய எதிர்பார்ப்புகளில் ஒன்றாகும் என அவர் குறிப்பிட்டார்.

எதிர்காலத்தில் எவரும் அரசியலுக்கு வந்து இவ்வாறான மோசடிகளில் ஈடுபடுவதற்கு அஞ்சும் வகையிலான சூழலை உருவாக்குவதற்கு, இந்த சட்ட நடவடிக்கைகளை தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்வது அவசியம் எனவும் அவர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், ஊழலில் ஈடுபட்டவர்களை கைது செய்வதன் மூலம் மட்டும் நாட்டின் பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது என வலியுறுத்திய அமைச்சர் லால் காந்த, வரவு-செலவுத் திட்டத்தின் மூலம் ஒதுக்கப்படும் நிதியை நூறு சதவீதம் பயனுள்ள வகையில் நாட்டின் அபிவிருத்திக்கு பயன்படுத்துவதில் அரச சேவையில் நிலவும் அதிகாரிகள் பற்றாக்குறையும் மட்டுப்படுத்தப்பட்ட திறனும் பாரிய தடையாக இருப்பதாகக் கூறினார்.

எனவே, ஒதுக்கப்படும் நிதியை முறையாக நிர்வகித்து அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கு அரச துறையை விரைவாக வலுப்படுத்த வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்பாக ஜனாதிபதி வெளியிட்டிருந்த கருத்தை விளக்கிய அமைச்சர், நீதித்துறையின் சுயாதீனத்திற்கும் சட்டத்தின் ஆட்சிக்கும் அரசாங்கம் எந்தவிதத்திலும் தலையிடாது என வலியுறுத்தினார்.

குற்றங்கள் அல்லது பண மோசடிகளில் ஈடுபட்டவர்களை கைது செய்வது, பிணை வழங்குவது அல்லது தண்டனை விதிப்பது ஆகியவை நீதிமன்ற நடைமுறைகளுக்கு உட்பட்ட விடயங்கள் என அவர் தெரிவித்தார். உதாரணமாக, நாமல் ராஜபக்ஷவை கைது செய்து சிறையில் அடைப்பதில் அரசாங்கம் நேரடியாக தலையிடாது என்றும், இவை அனைத்தும் சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் நீதித்துறை ஊடாக சுயாதீனமாக இடம்பெற வேண்டும் என்றும் அவர் கூறினார்.

அரசாங்கம் மேற்கொள்வது நீதித்துறை அமைப்பை வலுப்படுத்துவதற்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குவது மட்டுமே எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

இதனிடையே, ரயில் வேலைநிறுத்தம் உள்ளிட்ட தொழிற்சங்க நடவடிக்கைகள் தொடர்பாக கருத்து தெரிவித்த அமைச்சர், எந்தவொரு தொழிற்சங்கத்திற்கும் தமது உரிமைகளுக்காக போராட்டம் நடத்தவும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவும் முழுமையான சுதந்திரம் இருப்பதாகக் குறிப்பிட்டார்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் ஏற்பட்ட இதுபோன்ற பல பிரச்சினைகள் பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்க்கப்பட்டதைப் போன்று, தற்போது இடம்பெறும் ரயில் வேலைநிறுத்தத்தையும் பேச்சுவார்த்தை மூலம் அமைதியான முறையில் தீர்க்க முடியும் என அரசாங்கம் உறுதியாக நம்புவதாகவும் அமைச்சர் கே.டி. லால் காந்த மேலும் தெரிவித்தார்.

spot_img

Latest articles

அவுஸ்திரேலியாவில் வெளிநாட்டு மாணவர்களுக்கு புதிய விசா கட்டுப்பாடுகள்

அவுஸ்திரேலியாவில் கல்வி கற்கும் வெளிநாட்டு மாணவர்கள் தங்களது துணைவர் அல்லது துணைவியர் மற்றும் பிள்ளைகளை நாட்டிற்கு அழைத்து வருவதை...

தெமட்டகொட துப்பாக்கிச் சூடு – ஆட்டோ சாரதி பலி

தெமட்டகொடவில் உள்ள கலு பாலம் அருகே துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. இந்தத் துப்பாக்கிச் சூட்டில் முச்சக்கர வண்டி...

மட்டக்குளி கார் விபத்தில் இதுவரை மூவர் பலி

மட்டக்குளி பகுதியில் காரொன்று வீதியில் பயணித்த பல வாகனங்களுடன் மோதி நேற்று (16) இரவு இடம்பெற்ற கோர விபத்தில்...

இலங்கையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 98,081 ஆக அதிகரிப்பு

இந்த ஆண்டில் இதுவரை இலங்கையில் அடையாளம் காணப்பட்ட மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 98,081 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய...

More like this

அவுஸ்திரேலியாவில் வெளிநாட்டு மாணவர்களுக்கு புதிய விசா கட்டுப்பாடுகள்

அவுஸ்திரேலியாவில் கல்வி கற்கும் வெளிநாட்டு மாணவர்கள் தங்களது துணைவர் அல்லது துணைவியர் மற்றும் பிள்ளைகளை நாட்டிற்கு அழைத்து வருவதை...

தெமட்டகொட துப்பாக்கிச் சூடு – ஆட்டோ சாரதி பலி

தெமட்டகொடவில் உள்ள கலு பாலம் அருகே துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. இந்தத் துப்பாக்கிச் சூட்டில் முச்சக்கர வண்டி...

மட்டக்குளி கார் விபத்தில் இதுவரை மூவர் பலி

மட்டக்குளி பகுதியில் காரொன்று வீதியில் பயணித்த பல வாகனங்களுடன் மோதி நேற்று (16) இரவு இடம்பெற்ற கோர விபத்தில்...