2019ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பான பிரதான வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 15 பேருக்கு தலா 220 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய சிறப்பு Trial-at-Bar நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
மேலும், குற்றவாளிகளுக்குச் சொந்தமான அசையும் மற்றும் அசையா சொத்துக்களை பறிமுதல் செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு மற்றும் பல பகுதிகளில் உள்ள சுற்றுலா விடுதிகள், தேவாலயங்கள் மற்றும் ஏனைய இடங்களை இலக்கு வைத்து தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை நடத்துவதற்குச் சதி செய்தல் மற்றும் தாக்குதல்களுக்கு உதவி, ஒத்துழைப்பு வழங்கியமை உள்ளிட்ட 23,270 குற்றச்சாட்டுகளின் பேரில் வழக்குத் தொடரப்பட்ட 24 பிரதிவாதிகளில் 15 பேர் குற்றவாளிகளாகக் கண்டறியப்பட்டுள்ளனர்.
எஞ்சிய 9 பிரதிவாதிகளும் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.




