ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக ஓட்டமாவடியைச் சேர்ந்த சட்டத்தரணி ஹபீப் றிபான் கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீமினால் இன்று (21) நியமிக்கப்பட்டுள்ளார்.
அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கட்சியின் பிரதித் தலைவர் எம்.எஸ்.அப்துல் வாசித் இராஜினாமாவை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கே ஹபீப் றிபான் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமனம் தொடர்பில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் நிசாம் காரியப்பரால் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம், செயலாளரர் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர், தவிசாளர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், தேசிய அமைப்பாளர் எம்.எஸ். உதுமாலெப்பை, கட்சியின் உயர்பீட உறுப்பினர்களான அம்பாறை மாவட்ட செயலாளர் ஏ.சி.சமால்தீன் மற்றும் மௌலவி ஹாமித் ஆகியோர் கலந்து கொண்டனர்.




