Homeஉள்நாட்டு செய்தி2026 உலக சிறுவர் தின தேசிய வாரம் செப்டம்பர் 25 முதல் ஆரம்பம்

2026 உலக சிறுவர் தின தேசிய வாரம் செப்டம்பர் 25 முதல் ஆரம்பம்

spot_img

இம்முறை உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு, செப்டம்பர் 25 முதல் ஒக்டோபர் 01 வரை “2026 உலக சிறுவர் தின தேசிய வாரமாக” பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல் ராஜ் தெரிவித்துள்ளார்.

நேற்று (23) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார். “மனதால் வலிமையான – வளமான சிறுவர்கள்” என்பது இம்முறை சிறுவர் தினத்தின் தொனிப்பொருளாகும்.

சிறுவர்களின் கல்வி, சுகாதாரம், போஷாக்கு மற்றும் பாதுகாப்பை உறுதி செய்தல், சிறுவர் தொழில் மற்றும் சிறுவர் துஷ்பிரயோகத்தைத் தடுக்கும் சட்டங்களை நடைமுறைப்படுத்துதல், அத்துடன் போஷாக்குக் குறைபாட்டை ஒழித்தல் ஆகியவை இம்முறை நிகழ்ச்சிகளின் முக்கிய நோக்கங்களாகும்.

தேசிய சிறுவர் தின வாரத்தை முன்னிட்டு விரிவான நிகழ்ச்சித் தொடர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, செப்டம்பர் 25ஆம் திகதி சிறுவர்களுக்காக தயாரிக்கப்பட்ட புதிய சட்டமூலங்கள் மற்றும் தேசிய கொள்கைகள் அறிமுகப்படுத்தப்படுவதுடன், தற்போதுள்ள கொள்கைகளும் மீளாய்வு செய்யப்படவுள்ளன.

செப்டம்பர் 26ஆம் திகதி, சிறுவர் அபிவிருத்தி நிலையங்களில் உள்ள சிறுவர்களின் உடல் மற்றும் மனநலத்தை மேம்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

செப்டம்பர் 27ஆம் திகதி, குறித்த நிலையங்களில் இருந்து சமூகத்தில் இணையும் 18 வயதுக்கு மேற்பட்ட இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு வாய்ப்புகளை அறிமுகப்படுத்தும் முன்னோடித் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

செப்டம்பர் 28ஆம் திகதி, “வலிமையான மனம் – ஆரோக்கியமான வாழ்க்கை” என்ற தொனிப்பொருளில் மாவட்ட மட்டத்தில் சிறுவர்களின் படைப்புகள் மற்றும் திறமைகளை வெளிப்படுத்தும் கண்காட்சிகள் மற்றும் திறமை மதிப்பீடுகள் நடத்தப்படவுள்ளன.

செப்டம்பர் 29 மற்றும் 30ஆம் திகதிகளில், முறையே ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களை இலக்காகக் கொண்டு, சிறுவர்களை நேர்மறையான முறையில் ஒழுக்கப்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளன.

தேசிய சிறுவர் தின வாரத்தின் நிறைவாக, ஒக்டோபர் 01ஆம் திகதி காலை 9.00 மணிக்கு, பிரதமர் தலைமையில் இம்முறை உலக சிறுவர் தின தேசிய நிகழ்வு ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் பொறியியல் பீடத்தில் (மத்தேகொட) நடைபெறவுள்ளது.

spot_img

Latest articles

உலக சந்தை விலை உயர்ந்தாலும் நுகர்வோர் மீது முழுச் சுமையையும் சுமத்தமாட்டோம்

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை மீண்டும் அதிகரித்துள்ள போதிலும், அதன் முழுச் சுமையையும் இலங்கை நுகர்வோர் மீது...

ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான மருத்துவ சான்றிதழ் – புதிய டிஜிட்டல் முறை

ஓட்டுநர் உரிமம் பெறுவதற்குத் தேவையான மருத்துவ சான்றிதழ்களை வழங்குவதற்கான புதிய டிஜிட்டல் முறையொன்று இன்று (24) முதல் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக...

மழையுடனான வானிலை மேலும் தொடரும்

மேற்கு-மத்திய மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்பில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், மேற்கு...

அத்தியாவசிய மருந்துகளில் 33 வகைக்கு தட்டுப்பாடு

– உயிர்காக்கும் 13 மருந்துகளுக்கும் தட்டுப்பாடு இல்லை இலங்கையில் பயன்படுத்தப்படும் 618 அத்தியாவசிய மருந்து வகைகளில் 33 வகைகளுக்கு...

More like this