மத்திய கிழக்கில் நிலவும் யுத்த சூழ்நிலை காரணமாக உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்துள்ள நிலையில், அதன் தாக்கத்தை இலங்கை மக்களுக்கு குறைக்கும் நோக்கில் அடுத்த மூன்று மாதங்களுக்கு ஆட்டோ டீசல் மற்றும் தொழில்துறை டீசலுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, ஒக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கு இந்த நிவாரணத்தை வழங்குவதற்குத் தேவையான நிதியை ஒதுக்குவதற்காக ஜனாதிபதி முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அதன்படி, ஒக்டோபர் மாதத்திற்கு 15 பில்லியன் ரூபாயும், நவம்பர் மாதத்திற்கு 13.5 பில்லியன் ரூபாயும், டிசம்பர் மாதத்திற்கு 12.15 பில்லியன் ரூபாயும் ஒதுக்கப்படவுள்ளன.
இதன்படி, மூன்று மாதங்களுக்கான டீசல் நிவாரணத்திற்காக ஒதுக்கப்படும் மொத்த தொகை 40.65 பில்லியன் ரூபாய் ஆகும்.
சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை அதிகரிப்புக்கு ஏற்ப நாட்டில் எரிபொருள் விலையை உயர்த்தாமல், நுகர்வோரால் தாங்கிக்கொள்ளக்கூடிய மட்டத்தில் விலையைப் பேணுவதே இந்த நிவாரணத்தின் நோக்கம் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.




