Homeஉள்நாட்டு செய்திஉலக சந்தை விலைகளுக்கு ஏற்ப எரிபொருள் விலையை மாற்ற வேண்டும் – IMF

உலக சந்தை விலைகளுக்கு ஏற்ப எரிபொருள் விலையை மாற்ற வேண்டும் – IMF

spot_img

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழ்நிலை, உலகளாவிய வர்த்தக நிச்சயமற்ற தன்மை மற்றும் எல் நினோ காலநிலை தாக்கம் ஆகியவற்றால் இலங்கை பொருளாதாரத்திற்கு மீண்டும் ஆபத்துகள் உருவாகி வருவதால், உலக சந்தை விலைகளுக்கு ஏற்ப நாட்டின் எரிபொருள் விலையை மாற்றுவதற்கு அனுமதிக்க வேண்டும் எனவும், செலவுகளை ஈடுசெய்யும் வகையில் எரிசக்தி விலை நிர்ணயத்தைத் தொடர்ந்து பேண வேண்டும் எனவும் சர்வதேச நாணய நிதியம் (IMF) இலங்கைக்கு அறிவுறுத்தியுள்ளது.

விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) திட்டத்தின் கீழான 7ஆவது மதிப்பாய்வு தொடர்பான பணியாளர் மட்ட உடன்பாட்டை எட்டிய பின்னர், இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் இவான் பபாஜோர்ஜியு (Evan Papageorgiou) இதனைத் தெரிவித்துள்ளார்.

உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்தாலும், நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் பொதுவான அல்லது வரையறையற்ற மானியங்களை வழங்குவதைத் தவிர்க்க வேண்டும் எனவும் IMF பரிந்துரைத்துள்ளது.

அதற்குப் பதிலாக, எரிபொருள் விலை அதிகரிப்பால் பாதிக்கப்படும் குறைந்த வருமானம் கொண்ட மற்றும் பாதிப்புக்குள்ளாகக்கூடிய குடும்பங்களுக்கு மட்டும் இலக்கு வைக்கப்பட்ட நிவாரணங்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என IMF தெரிவித்துள்ளது.

இலங்கை பொருளாதாரம் தொடர்ந்தும் ஸ்திரமான நிலையில் இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ள IMF, 2026ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் 4.2% பொருளாதார வளர்ச்சி பதிவாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும், ஆகஸ்ட் மாத இறுதிக்குள் இலங்கையின் உத்தியோகபூர்வ வெளிநாட்டு நாணயக் கையிருப்பு 6.9 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாகவும் IMF குறிப்பிட்டுள்ளது.

எவ்வாறாயினும், மத்திய கிழக்கு நெருக்கடியின் காரணமாக பணவீக்க அழுத்தம் மேலும் அதிகரித்தால், நாணயக் கொள்கையை இறுக்குவதற்கு மத்திய வங்கி தயாராக இருக்க வேண்டும் என்றும் சர்வதேச நாணய நிதியம் மேலும் வலியுறுத்தியுள்ளது.

spot_img

Latest articles

கைதி உடையில் வந்த ஞானசார தேரருக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

ஞானசார தேரருக்கு எதிரான வழக்கு ஒக்டோபர் 23ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இஸ்லாம் மதத்தை அவமதித்ததாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள கலகொடஅத்தே...

மஹிந்த கஹந்தகம ஐஸ் போதைப்பொருளுடன் கைது

கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் மஹிந்த கஹந்தகம ஐஸ் போதைப்பொருளுடன் கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால்...

கிராமப்புற பாடசாலைகளை வேகமாக ஆக்கிரமிக்கும் போதைப்பொருள!

நாட்டின் எதிர்கால வாரிசுகளான சிறுவர்களுக்கு சிறந்த சூழலை உருவாக்கிக் கொடுக்க வேண்டும் என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற...

விற்பனைக்கு வரும் குறைந்த விலையில் தரமான மதுபானம்

இலங்கையில் சட்டவிரோத மதுபானப் பாவனையை குறைக்கும் நோக்கில், குறைந்த விலையில் தரமான மதுபானத்தை உற்பத்தி செய்து வழங்கக்கூடிய உற்பத்தியாளர்...

More like this