Homeஉள்நாட்டு செய்திநாமல் ராஜபக்ஷ ஜனாதிபதி அனுரவுக்கு அனுப்பிய கோரிக்கை கடிதம்

நாமல் ராஜபக்ஷ ஜனாதிபதி அனுரவுக்கு அனுப்பிய கோரிக்கை கடிதம்

spot_img

வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குவதற்காக 2027ஆம் ஆண்டுக்கான வரவு–செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யுமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் நாமல் ராஜபக்ஷ கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின்போது தேசிய மக்கள் சக்தியினால் முன்வைக்கப்பட்ட “வளமான நாடு – அழகான வாழ்க்கை” என்ற கொள்கைப் பிரகடனத்தில், “திறன்மிக்க தொழிலாளர் வளம் – கண்ணியமான தொழில் வாழ்க்கை” என்ற அத்தியாயத்தின் கீழ் வேலையற்ற பட்டதாரிகள் தொடர்பில் விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான கொள்கை முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டிருந்ததாக அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, “வேலையற்ற பட்டதாரிகள்” என்ற பிரிவின் கீழ்,

  • ஆசிரியர் சேவைக்கு – 20,000 பேர்
  • தகவல் தொழில்நுட்பத் துறைக்கு – STEM பட்டதாரிகள் 3,000 பேர் மற்றும் Non-STEM பட்டதாரிகள் 9,000 பேர்
  • வருமான வரி, சுங்கம், வெளிநாட்டு சேவை மற்றும் சுற்றுலாத் துறைகளுக்கு – 3,000 பேர்

என வேலைவாய்ப்புகளை வழங்குவதாக கொள்கைப் பிரகடனத்தில் உறுதியளிக்கப்பட்டுள்ளதாக நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

எனவே, அந்தக் கொள்கைப் பிரகடனத்தில் வழங்கப்பட்டுள்ள உறுதிமொழியை நடைமுறைப்படுத்தும் வகையில், தற்போது வேலையின்றி இருக்கும் அனைத்து பட்டதாரிகளுக்கும் வேலைவாய்ப்புகளை வழங்குவதற்குத் தேவையான நிதி ஒதுக்கீட்டை எதிர்வரும் 2027ஆம் ஆண்டுக்கான வரவு–செலவுத் திட்டத்தில் மேற்கொள்ளுமாறு அவர் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

spot_img

Latest articles

ஷிரந்திக்கு விளக்கமறியல்

ஷிரந்தி ராஜபக்ஷவை எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு, கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 'சிரிலிய...

முன்னாள் அமைச்சர் ரோஹித போகொல்லாகம கைது!

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் (CIABOC) முன்னாள் அமைச்சர் ரோஹித போகொல்லாகம கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக...

ஈஸ்டர் தாக்குதல் மேலும் இருவருக்கும் 10 வருட கடூழிய சிறைத்தண்டனை!

புத்தளம், வண்ணாத்துவில்லு பகுதியில் உள்ள லெஸ்டோஸ் தோட்டத்தில் சட்டவிரோதமாக வெடிபொருட்களை களஞ்சியப்படுத்திய குற்றச்சாட்டில், குற்றத்தை ஒப்புக்கொண்ட இருவருக்கு கொழும்பு...

ஷிராணியின் கணவர் கைது

முன்னாள் முதல் பெண்மணி ஷிராந்தி ராஜபக்ஷவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில், முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி...

More like this