இலங்கையில் ஆண் சிறுவர்களின் பாதுகாப்பு தொடர்பில் தீவிர கவனம் செலுத்த வேண்டிய நிலைமை காணப்படுவதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் திட்டமிடல் மற்றும் தகவல் பிரிவின் பணிப்பாளர் ஷானிகா மல்லல்கொட இதனைத் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் ஆண் சிறுவர்கள் துஷ்பிரயோகத்திற்கு உள்ளானமை தொடர்பாக 9,613 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.




