‘சிரிலிய சவிய’ கணக்கிலிருந்து பணத்தைத் தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதற்பெண்மணி சிரந்தி ராஜபக்ஷவுக்கு, கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
கொழும்பு தேசிய வைத்தியசாலை நீதிமன்றத்தில் சமர்ப்பித்த மருத்துவ அறிக்கையின்படி, இதயத்திற்குச் செல்லும் இரத்த ஓட்டத்தைப் பாதிக்கும் வகையில் இதயத் தமனிகளில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால், அவருக்கு விரைவில் இதயத் தமனி மாற்றுப்பாதை அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவ அறிக்கைகள் உள்ளிட்ட தொடர்புடைய விடயங்களைப் பரிசீலித்த நீதவான் சந்தேக நபரை ரூ.100,000 ரொக்கப் பிணை மற்றும் தலா ரூ. 10 மில்லியன் மதிப்புள்ள இரண்டு பிணைதாரர்களுடன் பிணையில் விடுவிக்க உத்தரவிட்டார்.
அத்துடன் அவருக்கு வெளிநாட்டு பயணத் தடையையும் விதிக்கப்பட்டுள்ளது.




