Homeஉள்நாட்டு செய்திஷங்ரிலா ஹோட்டல் காணி விவகாரம் – மஹிந்த ராஜபக்ஷவுக்கு சிக்கல்

ஷங்ரிலா ஹோட்டல் காணி விவகாரம் – மஹிந்த ராஜபக்ஷவுக்கு சிக்கல்

spot_img

காலி முகத்திடலில் அமைந்துள்ள இராணுவத் தலைமையகத்திற்குச் சொந்தமான காணியை ஷங்ரிலா (Shangri-La) ஹோட்டல் குழுமத்திற்கு வழங்கியபோது, 5 மில்லியன் அமெரிக்க டொலர் லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட பல தரப்பினருக்கு எதிராக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

அக்காலத்தில் 5 மில்லியன் அமெரிக்க டொலர் என்பது இலங்கை ரூபாவில் 100 கோடி ரூபாவுக்கும் அதிகமான தொகையாகும்.

சிவில் அமைப்புகள் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்த முறைப்பாடுகள் மற்றும் முன்னதாகப் பொலிஸ் நிதிக் குற்ற விசாரணைப் பிரிவினால் சேகரிக்கப்பட்ட ஆதாரக் கோப்புகளின் அடிப்படையில் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

முன்னாள் ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் வெளிவிவகார மேற்பார்வை நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றிய சஜின் டி வாஸ் குணவர்தன தெரிவித்த கருத்துகள் மற்றும் சிங்கப்பூரின் ‘TPL Inter’ நிறுவன உரிமையாளரான சிதம்பரம் என்ற வர்த்தகர், 2015 ஒக்டோபர் 28ஆம் திகதி பொலிஸ் நிதிக் குற்ற விசாரணைப் பிரிவிடம் வழங்கிய சத்தியப்பிரமாண வாக்குமூலம் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த முறைகேடு தொடர்பான தகவல்கள் முதன்முதலில் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.

அப்போதைய நிதிக் குற்ற விசாரணைப் பிரிவின் தலைவரும் ஓய்வுபெற்ற சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருமான ரவி வைத்தியலங்கார உள்ளிட்ட விசாரணை அதிகாரிகள் குழுவிடம், சிங்கப்பூரில் வைத்து வழங்கப்பட்ட அந்தச் சத்தியப்பிரமாண வாக்குமூலத்தில், குறித்த கொடுக்கல் வாங்கலுடன் தொடர்புடைய தரகுப் பணம் மற்றும் தரகு கமிஷன் தொகைகள் எவ்வாறு பரிமாறப்பட்டன என்பது தொடர்பான தகவல்கள் பதிவுசெய்யப்பட்டிருந்தன.

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் முன் உள்ள குற்றச்சாட்டுகளின்படி, ஷங்ரிலா நிறுவனத்திடமிருந்து பெறப்பட்டதாகக் கூறப்படும் இந்த 5 மில்லியன் அமெரிக்க டொலர் லஞ்சத் தொகை, இலங்கையின் பிரபல தனியார் நிதி நிறுவனமொன்றின் ஊடாகப் பணமோசடி செய்யப்பட்டு, சட்டபூர்வமான பணமாக நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

spot_img

Latest articles

பௌத்த சாசனத்தை அழிக்கும் NPP அரசாங்கம்

பௌத்த சாசனத்திற்கு போர்த்துக்கேயர்களை விடவும் அதிக அழிவை தற்போதைய தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் ஏற்படுத்தி வருவதாக...

ஞானசார தேரருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்க முடியாது

– அமைச்சர் லால் காந்த கொழும்பை நோக்கி பாதயாத்திரையாகச் செல்லும் பிக்குகள் முன்வைத்துள்ள கோரிக்கையை நிறைவேற்ற முடியாது என...

குறைந்த வருமானம் பெறும் 22,500 பேருக்கு இலவச கண் பரிசோதனை மற்றும் மூக்குக் கண்ணாடிகள்!

கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் ஊடாக, 2026ஆம் ஆண்டில் குறைந்த வருமானம் பெறும்...

பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை

மேல், சபரகமுவ, மத்திய மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் சில இடங்களில் சுமார் 75 மில்லிமீற்றர் அளவிலான...

More like this