Homeஉள்நாட்டு செய்திமன்னிப்பு இல்லையென்றால் புதிய ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்போம்!

மன்னிப்பு இல்லையென்றால் புதிய ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்போம்!

spot_img

ஞானசார தேரருக்கு நிபந்தனையற்ற விடுதலை வழங்கப்படாவிட்டால், புதிய ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பது குறித்து பரிசீலிக்க வேண்டிய நிலை ஏற்படும் என பலாங்கொட கஸ்ஸப்ப தேரர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை (ஒக்டோபர் 17) வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த காசப்ப தேரர், ஞாயிற்றுக்கிழமை (ஒக்டோபர் 18) கொழும்பு விஹாரமகாதேவி பூங்காவில் நடைபெற்று வரும் போராட்டத்தில் மீண்டும் கலந்துகொண்டு இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளார்.

சிறைத்தண்டனை அனுபவித்து வரும் கலகொட அத்தே ஞானசார தேரரை நிபந்தனையின்றி விடுவிப்பதே தங்களது முதன்மையான நோக்கம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கம் தங்களது போராட்டத்தைத் தவறாகப் புரிந்துகொண்டுள்ளதாகத் தெரிவித்த கஸ்ஸப்ப தேரர், அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்காகத் தாங்கள் போராட்டத்தில் ஈடுபடவில்லை என்றும், ஞானசார தேரரை விடுவிக்கும் பொறுப்பு ஜனாதிபதியிடமே உள்ளதாகவும் கூறியுள்ளார்.

ஜனாதிபதி தமது கோரிக்கையைத் தொடர்ந்து நிராகரித்தால், வேறு வழிகளைப் பரிசீலிக்க வேண்டியிருக்கும் எனத் தெரிவித்த அவர்,

“ஜனாதிபதி தொடர்ந்து பிடிவாதமாகச் செயற்பட்டால், அவரை விடுவிக்க வேறு சட்டபூர்வமான வழி இல்லாவிட்டால் என்ன செய்வது? தேவையானால் புதிய ஜனாதிபதியைத் தேர்ந்தெடுக்க வேண்டியிருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், கடந்த சனிக்கிழமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த போதிலும், ஞானசார தேரர் சிறையில் துன்பப்படும்போது தங்களால் வசதியாக இருக்க முடியாது என்பதால், சக பிக்குகள் வழங்க முன்வந்த மேலதிக வசதிகளையும் நிராகரித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

வலியுடனேயே போராட்டத்தில் மீண்டும் கலந்துகொண்டதாகக் குறிப்பிட்ட கஸ்ஸப்ப தேரர், தொடரும் போராட்டத்திற்கு வலுச்சேர்ப்பதே தனது நோக்கம் என்றும் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் முன்னதாக முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களைத் தொடர்ந்து, ஞானசார தேரரின் விடுதலையை வலியுறுத்தி தற்போது விஹாரமகாதேவி பூங்காவில் பிக்குகள் மற்றும் ஆதரவாளர்களின் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

spot_img

Latest articles

அக்குறணை விபத்தில் நால்வர் பலி

அக்குறணை, குருகொட சந்திக்கு அருகில் இன்று இடம்பெற்ற கோர வீதி விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கட்டுப்பாட்டை இழந்த...

சீருடை விவகாரத்தைப் வைத்து நாட்டை சீர்குலைக்க முயற்சிப்போருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை!

சீருடை விவகாரத்தைப் பயன்படுத்தி நாசகாரச் செயல்களிலும் நாட்டை ஸ்திரமற்ற நிலைக்குக் கொண்டுசெல்லும் நடவடிக்கைகளிலும் ஈடுபடும் பல்வேறு நபர்களுக்கு எதிராகக்...

இனி காவி உடை அணிய மாட்டேன்! அடம்பிடிக்கும் ஞானசார தேரர்!

நீதிமன்ற அவமதிப்புக் குற்றத்திற்காக இதற்கு முன்னரும் சிறைத்தண்டனை பெற்றிருந்தபோதிலும், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சிறைக்குள்ளோ அல்லது வெளியிலோ தனது காவி...

நாடு முழுக்க மின் தடை!

நாட்டின் பல பகுதிகளில் திடீர் மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளதாகப் பதிவாகியுள்ளது. இன்று (17) முற்பகல் 11.45 மணியளவில் இந்த மின்சாரத்...

More like this