Homeஉள்நாட்டு செய்திஎரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

spot_img

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் மற்றும் எரிபொருட்களின் விலைகள் வேகமாக அதிகரித்துள்ள நிலையில், இலங்கையில் சில்லறை எரிபொருள் விநியோகத்தில் ஈடுபட்டுள்ள மூன்று முன்னணி வெளிநாட்டு நிறுவனங்கள் தமது விநியோக நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தியுள்ளதாக கொழும்பு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இதன் காரணமாக உருவாகியுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டைச் சமாளிப்பதில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) கடும் சவால்களை எதிர்கொண்டுள்ளதாகவும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை இந்தியன் ஒயில் நிறுவனம் (LIOC), சீனாவின் சினோபெக் (Sinopec) மற்றும் அமெரிக்காவின் ஆர்.எம். பார்க்ஸ் (RM Parks) ஆகிய வெளிநாட்டு நிறுவனங்கள் தமது எரிபொருள் விநியோகத்தைக் கட்டுப்படுத்தியுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா உறுதிப்படுத்தியுள்ளார்.

நாட்டின் மொத்த எரிபொருள் விநியோகத்தில் சுமார் 45 சதவீதத்தை இந்த வெளிநாட்டு நிறுவனங்கள் வழங்கி வந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

எனினும், தற்போதைய சூழ்நிலையில் நாட்டின் டீசல் தேவையில் சுமார் 80 சதவீதத்தைத் தனது எரிபொருள் நிரப்பு நிலைய வலையமைப்பின் ஊடாக விநியோகிக்க வேண்டிய நிலை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எரிபொருள் நுகர்வைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து வினவப்பட்டபோது, அதற்கான மிகவும் நடைமுறைச் சாத்தியமான தீர்வு எரிபொருள் விலையை அதிகரிப்பதே என அவர் தெரிவித்துள்ளார்.

“விநியோகத்தைக் கட்டுப்படுத்துவதற்காக QR குறியீட்டு முறையை மீண்டும் கடுமையாக நடைமுறைப்படுத்த எங்களால் முடியாது. ஏனெனில், அதற்காகப் பெருமளவிலான நிர்வாகச் செலவுகளைச் செய்ய வேண்டியிருக்கும். இதன் காரணமாக, எரிபொருள் விலையை அதிகரிப்பது தொடர்பில் தற்போது கவனம் செலுத்தப்பட்டு வருகிறது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக சர்வதேச சந்தையில் டீசல் மற்றும் பெட்ரோல் விலைகள் வழக்கத்திற்கு மாறாக அதிகரித்துள்ளதால், பெற்றோலியக் கூட்டுத்தாபனம் கடுமையான நிதி மற்றும் செயற்பாட்டுச் சவால்களை எதிர்கொண்டு வருகின்றது.

கடந்த செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, சர்வதேச சந்தையில் ஒரு பீப்பாய் டீசலின் விலை 174 அமெரிக்க டொலர் வரையிலும், ஒரு பீப்பாய் பெட்ரோலின் விலை 133 அமெரிக்க டொலர் வரையிலும் அதிகரித்துள்ளதாக பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

spot_img

Latest articles

இலங்கையில் மின்சார வாகனப் பதிவுகள் அதிகரிப்பு

இலங்கையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் (2025 மற்றும் 2026) மின்சார வாகனங்களின் பதிவுகள் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மோட்டார்...

34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம்

இலங்கையில் 34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். பத்தரமுல்லையில் நடைபெற்ற...

23 சொகுசு வாகனங்கள் தொடர்ந்தும் பயன்பாட்டில்

நகர அபிவிருத்தி, நிர்மாணத்துறை மற்றும் வீடமைப்பு அமைச்சுக்குச் சொந்தமான 39 சொகுசு வாகனங்கள், பொருளாதார ரீதியில் பயனற்றவை என்றும்...

நாமலுக்கு பிணை மறுப்பு

கிரிஷ் நிறுவன விவகாரத்தில் 70 மில்லியன் ரூபாய் நிதி மோசடி மற்றும் இலஞ்சக் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள...

More like this