– எதிர்க்கட்சித் தலைவரிடம் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் குற்றச்சாட்டு
பல தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் இன்று (30) எதிர்க்கட்சித் தலைவரைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
இதன்போது, அரசாங்கத்தினால் கொண்டுவரத் தயாராகி வரும் அரச பயங்கரவாதத் தடுப்புச் சட்டமூலம் (PSTA) ஊடாக தொழிற்சங்கங்களை ஒடுக்குவதற்கு முயற்சி மேற்கொள்ளப்படுவதாக அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
ஐக்கிய தொழிற்சங்கக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஆனந்த பாலித கருத்துத் தெரிவிக்கையில், முன்மொழியப்பட்டுள்ள இரண்டு சட்டமூலங்கள் ஊடாக மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளைப் புறக்கணித்து, தனிநபர்களை 72 மணித்தியாலங்கள் வரை தடுத்து வைத்திருப்பதற்கான அதிகாரத்தைப் பெற்றுக்கொள்ள முயற்சிக்கப்படுவதாகக் குறிப்பிட்டார்.
மேலும், நாட்டின் எரிசக்தித் துறையில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாகவும், மின்சார விநியோகத்தில் சிக்கல்கள் நிலவுவதுடன், எரிவாயு விநியோகம் தொடர்பாகவும் மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
எரிவாயுக் கப்பல்கள் நாட்டை வந்தடைந்துள்ளதாகவும், அவற்றிலிருந்து எரிவாயு இறக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்ட போதிலும், மக்கள் தொடர்ந்தும் வரிசைகளில் காத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இதற்கிடையில், இன்று இரவு அல்லது நாளை எரிபொருள் விலை அதிகரிக்கப்படுவதற்கான அபாயம் இருப்பதாகவும் ஆனந்த பாலித எச்சரித்தார்.
உலகச் சந்தையில் எரிபொருள் விலைகள் அதிகரித்து வருவது தொடர்பான செய்திகள் அரச ஊடகங்களில் வெளியாகி வருவதாகக் குறிப்பிட்ட அவர், எரிபொருள் விலை அதிகரிப்பால் பாதிக்கப்படும் மக்கள் தொடர்பில் கவனம் செலுத்துமாறு ஊடகங்களைக் கேட்டுக்கொண்டார்.
அத்துடன், நாளை எரிபொருள் விலையை அதிகரிக்க அனுமதிக்க வேண்டாம் என்றும் அதிகாரிகளிடம் அவர் கோரிக்கை விடுத்தார்.




