Homeஉள்நாட்டு செய்திஇலங்கையில் ஆண்கள், பெண்கள் இருபாலரிடமும் நுரையீரல் புற்றுநோய் பாதிப்பு 50% அதிகரிப்பு!

இலங்கையில் ஆண்கள், பெண்கள் இருபாலரிடமும் நுரையீரல் புற்றுநோய் பாதிப்பு 50% அதிகரிப்பு!

spot_img

இலங்கையில் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இருபாலரிடமும் நுரையீரல் புற்றுநோய் பாதிப்பு குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து வருவதாக தேசிய சுவாச நோயியல் நிறுவகத்தின் மார்பகக் குழி தொடர்பான விசேட சத்திரசிகிச்சை நிபுணர் வைத்தியர் சமன் இத்தகொட தெரிவித்துள்ளார்.

2010ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் ஆண்கள் மற்றும் பெண்கள் இருபாலரிடமும் நுரையீரல் புற்றுநோய் பாதிப்பு சுமார் 50 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,

வெலிசறை மார்பு நோய் வைத்தியசாலையின் தரவுகள் மற்றும் தேசிய புற்றுநோய் தடுப்புத் திட்டத்தின் தரவுகளை ஆய்வு செய்ததில், இலங்கையில் நுரையீரல் புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வருவது கண்டறியப்பட்டதாகத் தெரிவித்தார்.

2010 முதல் 2020 வரையான காலப்பகுதியில் ஆண்கள் மற்றும் பெண்கள் இருபாலரிடமும் இந்நோயின் பாதிப்பு சுமார் 50 சதவீதம் அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக, ஆண்களிடையே முக்கியமான புற்றுநோய் வகைகளில் ஒன்றாக நுரையீரல் புற்றுநோய் உருவெடுத்து வருவதுடன், பெண்களிடையே அதிகம் காணப்படும் முதல் 10 புற்றுநோய் வகைகளுக்குள்ளும் இது இடம்பெற்று வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

குறிப்பாக, புகைப்பிடிக்காத பெண்களிடையேயும் நுரையீரல் புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வருவதாக அவர் தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த தேசிய புற்றுநோய் தடுப்புத் திட்டத்தின் சமூக மருத்துவ நிபுணர் வைத்தியர் ஹசரலி பெர்னாண்டோ,

நுரையீரல் புற்றுநோய்களில் சுமார் 90 சதவீதம் புகைப்பிடித்தலுடன் தொடர்புடையவை எனக் குறிப்பிட்டார்.

எனினும், புகைப்பிடிக்காதவர்களுக்கும் இந்நோய் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும், பிறர் புகைக்கும் சிகரெட்டிலிருந்து வெளியாகும் புகையைச் சுவாசிப்பதும் (Second-hand Smoking) நுரையீரல் புற்றுநோய்க்கான ஆபத்துக் காரணியாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், வெளிப்புற மற்றும் உட்புற காற்று மாசுபாடுகளும் நுரையீரல் புற்றுநோய் ஏற்படுவதற்கான முக்கிய காரணிகளாக உள்ளன.

வெளிப்புறக் காற்று மாசுபாடு பெரும்பாலும் வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகளிலிருந்து வெளியாகும் எரிபொருள் புகையினால் ஏற்படுகின்றது.

அதேவேளை, வீடுகளில் விறகு மற்றும் மண்ணெண்ணெய் பயன்படுத்தி சமையல் செய்வதாலும் உட்புறக் காற்று மாசுபாடு ஏற்படுவதாகவும், போதிய காற்றோட்டம் இல்லாத வீடுகளில் இந்தப் பாதிப்பு அதிகமாக இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

spot_img

Latest articles

மக்கள் மீது தேவையற்ற வரிச்சுமையை அரசாங்கம் சுமத்தவில்லை

– அமைச்சர் அனில் ஜயந்த தற்போதைய அரசாங்கம் மக்கள் மீது தேவையற்ற வகையில் வரிச்சுமையைச் சுமத்தவில்லை என்றும், ஏற்கனவே நடைமுறையில்...

ரகித ராஜபக்ஷவின் சொத்துக்கள் மூடக்கம்

முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் மகனும் சட்டத்தரணியுமான ரகித ராஜபக்ஷவுக்குச் சொந்தமான நான்கு வங்கிக் கணக்குகள் மற்றும் இரண்டு...

3 பில்லியன் பெறுமதியான போதைப்பொருளுடன் சிக்கிய படகு.!

கடற்படை மற்றும் புலனாய்வுப் பிரிவினர் இணைந்து நடத்திய சோதனையில், தெற்கு ஆழ்கடல் பகுதியில் கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்ட நெடுநாள் மீன்பிடிப்...

தென் கொரியாவில் ஐந்து தரப்பினருக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

கல்வி, திறன் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பு வாய்ப்புகளை விரிவுபடுத்தும் நோக்கில், இலங்கை தொழில் அமைச்சு உள்ளிட்ட ஐந்து தரப்பினருக்கு...

More like this

மக்கள் மீது தேவையற்ற வரிச்சுமையை அரசாங்கம் சுமத்தவில்லை

– அமைச்சர் அனில் ஜயந்த தற்போதைய அரசாங்கம் மக்கள் மீது தேவையற்ற வகையில் வரிச்சுமையைச் சுமத்தவில்லை என்றும், ஏற்கனவே நடைமுறையில்...

ரகித ராஜபக்ஷவின் சொத்துக்கள் மூடக்கம்

முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் மகனும் சட்டத்தரணியுமான ரகித ராஜபக்ஷவுக்குச் சொந்தமான நான்கு வங்கிக் கணக்குகள் மற்றும் இரண்டு...

3 பில்லியன் பெறுமதியான போதைப்பொருளுடன் சிக்கிய படகு.!

கடற்படை மற்றும் புலனாய்வுப் பிரிவினர் இணைந்து நடத்திய சோதனையில், தெற்கு ஆழ்கடல் பகுதியில் கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்ட நெடுநாள் மீன்பிடிப்...