Homeஉள்நாட்டு செய்திதென் கொரியாவில் ஐந்து தரப்பினருக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

தென் கொரியாவில் ஐந்து தரப்பினருக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

spot_img

கல்வி, திறன் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பு வாய்ப்புகளை விரிவுபடுத்தும் நோக்கில், இலங்கை தொழில் அமைச்சு உள்ளிட்ட ஐந்து தரப்பினருக்கு இடையிலான பல்தரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் தென் கொரியாவின் சாங்வொன் (Changwon) கண்காட்சி மற்றும் மாநாட்டு மையத்தில் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இலங்கை தொழில் அமைச்சுடன், தேசிய தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார நிறுவனம், கியோங்சங்நம்-டோ மாகாண அரசாங்கம், சாங்ஷின் பல்கலைக்கழகம் மற்றும் சச்சியோன் வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனம் ஆகியன இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் இலங்கை மாணவர்களுக்கு உயர்கல்வி, தொழிற்பயிற்சி, கைத்தொழில் துறைசார் மனிதவள மேம்பாடு மற்றும் தென் கொரியாவில் நிரந்தர வதிவிட வாய்ப்புகள் உள்ளிட்ட பல்வேறு சந்தர்ப்பங்களை உருவாக்குவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கைத் தூதுக்குழுவிற்கு தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தலைமை தாங்கியதுடன், தொழில் அமைச்சின் செயலாளர் எஸ்.எம். பியதிஸ்ஸ மற்றும் தேசிய தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் துமிந்த ஜயலத் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

கொரியத் தரப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தி கியோங்சங்நம்-டோ கல்வி மற்றும் இளைஞர் பணியகத்தின் பணிப்பாளர் நாயகம் கிம் சோங்-கியூ, சச்சியோன் வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் ஹ்வாங் தே-பூ மற்றும் சாங்ஷின் பல்கலைக்கழகத்தின் ANCHOR திட்டக் குழுப் பணிப்பாளர் லீ ஜே-ஹக் ஆகியோர் பங்கேற்றனர்.

இலங்கைக்கும் சாங்ஷின் பல்கலைக்கழகத்திற்கும் இடையில் ஏற்கனவே நிலைநாட்டப்பட்டுள்ள கல்விசார் ஒத்துழைப்பின் மூலம் இலங்கை மாணவர்கள் தென் கொரியாவில் கல்வி வாய்ப்புகளைப் பெற்றுவருகின்றனர். புதிய ஒப்பந்தத்தின் மூலம் இந்த வாய்ப்புகளை மேலும் வலுப்படுத்தி விரிவுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கல்வி, தொழில் பாதுகாப்பு, தொழில்சார் திறன்கள் மற்றும் கைத்தொழில் அபிவிருத்தி ஆகியவற்றை ஒன்றிணைக்கும் சர்வதேச கூட்டாண்மைகளை விரிவுபடுத்துவதற்கான இலங்கையின் முயற்சியில் இந்த ஒப்பந்தம் முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.

மேலும், எதிர்காலத்தில் இரு நாடுகளுக்கும் பயனளிக்கும் வகையில் கூட்டு வேலைத்திட்டங்கள், நிறுவனங்களுக்கிடையிலான பரிமாற்றங்கள் மற்றும் கல்வியிலிருந்து வேலைவாய்ப்பிற்குச் செல்லும் கட்டமைக்கப்பட்ட வழிமுறைகளை உருவாக்குவதற்கும் இந்த ஒத்துழைப்பு அடித்தளமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அரசாங்கம், கல்வித்துறை மற்றும் கைத்தொழில் துறையை ஒன்றிணைத்து சர்வதேச மட்டத்தில் போட்டியிடக்கூடிய திறன்மிக்க மனிதவளத்தை உருவாக்குவதற்கான இரு நாடுகளின் பொதுவான அர்ப்பணிப்பை இந்த ஒப்பந்தம் வெளிப்படுத்துவதுடன், இலங்கை மற்றும் தென் கொரியா இடையிலான நீண்டகால நட்புறவையும் மேலும் வலுப்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.தென் கொரியாவில் இலங்கை மாணவர்களுக்கு உயர்கல்வி, தொழிற்பயிற்சி மற்றும் வேலைவாய்ப்புகளை விரிவுபடுத்த ஐந்து தரப்பினருக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

கல்வி, திறன் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பு வாய்ப்புகளை விரிவுபடுத்தும் நோக்கில், இலங்கை தொழில் அமைச்சு உள்ளிட்ட ஐந்து தரப்பினருக்கு இடையிலான பல்தரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் தென் கொரியாவின் சாங்வொன் (Changwon) கண்காட்சி மற்றும் மாநாட்டு மையத்தில் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இலங்கை தொழில் அமைச்சுடன், தேசிய தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார நிறுவனம், கியோங்சங்நம்-டோ மாகாண அரசாங்கம், சாங்ஷின் பல்கலைக்கழகம் மற்றும் சச்சியோன் வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனம் ஆகியன இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் இலங்கை மாணவர்களுக்கு உயர்கல்வி, தொழிற்பயிற்சி, கைத்தொழில் துறைசார் மனிதவள மேம்பாடு மற்றும் தென் கொரியாவில் நிரந்தர வதிவிட வாய்ப்புகள் உள்ளிட்ட பல்வேறு சந்தர்ப்பங்களை உருவாக்குவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கைத் தூதுக்குழுவிற்கு தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தலைமை தாங்கியதுடன், தொழில் அமைச்சின் செயலாளர் எஸ்.எம். பியதிஸ்ஸ மற்றும் தேசிய தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் துமிந்த ஜயலத் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

கொரியத் தரப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தி கியோங்சங்நம்-டோ கல்வி மற்றும் இளைஞர் பணியகத்தின் பணிப்பாளர் நாயகம் கிம் சோங்-கியூ, சச்சியோன் வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் ஹ்வாங் தே-பூ மற்றும் சாங்ஷின் பல்கலைக்கழகத்தின் ANCHOR திட்டக் குழுப் பணிப்பாளர் லீ ஜே-ஹக் ஆகியோர் பங்கேற்றனர்.

இலங்கைக்கும் சாங்ஷின் பல்கலைக்கழகத்திற்கும் இடையில் ஏற்கனவே நிலைநாட்டப்பட்டுள்ள கல்விசார் ஒத்துழைப்பின் மூலம் இலங்கை மாணவர்கள் தென் கொரியாவில் கல்வி வாய்ப்புகளைப் பெற்றுவருகின்றனர். புதிய ஒப்பந்தத்தின் மூலம் இந்த வாய்ப்புகளை மேலும் வலுப்படுத்தி விரிவுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கல்வி, தொழில் பாதுகாப்பு, தொழில்சார் திறன்கள் மற்றும் கைத்தொழில் அபிவிருத்தி ஆகியவற்றை ஒன்றிணைக்கும் சர்வதேச கூட்டாண்மைகளை விரிவுபடுத்துவதற்கான இலங்கையின் முயற்சியில் இந்த ஒப்பந்தம் முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.

மேலும், எதிர்காலத்தில் இரு நாடுகளுக்கும் பயனளிக்கும் வகையில் கூட்டு வேலைத்திட்டங்கள், நிறுவனங்களுக்கிடையிலான பரிமாற்றங்கள் மற்றும் கல்வியிலிருந்து வேலைவாய்ப்பிற்குச் செல்லும் கட்டமைக்கப்பட்ட வழிமுறைகளை உருவாக்குவதற்கும் இந்த ஒத்துழைப்பு அடித்தளமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அரசாங்கம், கல்வித்துறை மற்றும் கைத்தொழில் துறையை ஒன்றிணைத்து சர்வதேச மட்டத்தில் போட்டியிடக்கூடிய திறன்மிக்க மனிதவளத்தை உருவாக்குவதற்கான இரு நாடுகளின் பொதுவான அர்ப்பணிப்பை இந்த ஒப்பந்தம் வெளிப்படுத்துவதுடன், இலங்கை மற்றும் தென் கொரியா இடையிலான நீண்டகால நட்புறவையும் மேலும் வலுப்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_img

Latest articles

நவம்பர் 14ஆம் திகதி வரும் LAUGFS எரிவாயுக் கப்பல் தொடர்பிலும் நம்பிக்கை இல்லை

– அமைச்சர் வசந்த சமரசிங்க உள்நாட்டு சந்தைக்கு தொடர்ச்சியாக எரிவாயு விநியோகம் செய்வதாக LAUGFS நிறுவனம் அரசாங்கத்திற்கு எழுத்து மூலம்...

வெற்று மதுபானப் போத்தல்களுக்கான விலை அதிகரிப்பு

வெற்று மதுபானப் போத்தல்களைத் திருப்பிக் கையளிக்கும்போது வழங்கப்படும் வைப்புத் தொகையை அதிகரிக்க மதுபான உற்பத்தி நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன. மதுபானப்...

மின்சாரக் கட்டணம் 1.46% ஆல் அதிகரிக்கும்?

2026 ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டிற்கான மின்சாரக் கட்டணத்தை 1.46 சதவீதத்தால் அதிகரிப்பதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு...

தேவைக்கு ஏற்ப காய்கறி விநியோகம் இல்லாததால் விலைகள் கடும் உயர்வு

– ஹட்டன் வர்த்தகர்கள் தெரிவிப்பு உள்நாட்டு சந்தையில் தேவைக்கு ஏற்ப காய்கறி விநியோகம் இல்லாததன் காரணமாக, மலையக மற்றும்...

More like this