Homeஉள்நாட்டு செய்திகடந்த 50 ஆண்டுகளாக தீர்க்கப்படாத அபிவிருத்திப் பணிகளை இரண்டு ஆண்டுகளில் எதிர்பார்ப்பது நியாயமல்ல

கடந்த 50 ஆண்டுகளாக தீர்க்கப்படாத அபிவிருத்திப் பணிகளை இரண்டு ஆண்டுகளில் எதிர்பார்ப்பது நியாயமல்ல

spot_img

– அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார

கடந்த சுமார் 50 ஆண்டுகளாக நாட்டை ஆட்சி செய்த முந்தைய அரசாங்கங்கள் உரிய முறையில் முன்னெடுக்காமல் கைவிட்ட அபிவிருத்திப் பணிகளை, தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகளுக்குள் நிறைவேற்ற வேண்டும் என எதிர்பார்ப்பது நியாயமற்றது என்று நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

76 ஆண்டுகளாக நாட்டை ஆட்சி செய்த தரப்பினரால் உண்மையில் என்ன அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட்டன என்பது குறித்து கேள்வி எழுப்பப்பட வேண்டும் என்றும், தற்போதுள்ள பிரச்சினைகளுக்குத் துரிதமாகத் தீர்வுகளை வழங்குவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் முன்னெடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு நகரில் ஏற்பட்டுள்ள வெள்ள நிலைமை தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த அமைச்சர், கொழும்பில் காணப்படும் வடிகால் மற்றும் கழிவுநீர் அகற்றும் கட்டமைப்புகள் பல ஆண்டுகளுக்கு முன்னர் நிலவிய காலநிலை மாற்றங்களுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டவை எனக் குறிப்பிட்டார்.

தற்போது காலநிலை மாற்றம் காரணமாகப் பெய்து வரும் அதிக மழைவீழ்ச்சி இந்நிலைக்கு நேரடிக் காரணமாக அமைந்துள்ளதாகவும், கொழும்பு நகரம் வெள்ளத்தில் மூழ்குவது இதுவே முதல் தடவையல்ல என்றும் அவர் தெரிவித்தார்.

இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு எவ்வளவு காலம் தேவைப்படும் என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர், அது தொடர்பாகக் கொழும்பு மாநகர முதல்வரிடமே கேட்க வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

மேலும், மக்களின் தேவைகளுக்கு ஏற்ப உரிய முறையில் கடமைகளை நிறைவேற்றத் தவறும் பட்சத்தில், மாநகர முதல்வர்கள் உட்பட எந்தப் பதவியில் இருப்பவர்களையும் அரசாங்கம் தொடர்ந்து அந்தப் பதவிகளில் வைத்திருக்காது என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

spot_img

Latest articles

ஜனாதிபதியின் ஒரே வருமானம் சம்பளம் – சஜித்தின் நிதிச் சொத்துகளும் குறைவு!

ஜனாதிபதி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் இந்த ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான பிரகடனத்தின்படி, ஜனாதிபதியின் ஒரே...

குடும்பங்கள் மற்றும் தனிநபர் துறைகளின் கடன் பெறுதல் 10.6% அதிகரிப்பு!

இலங்கையில் குடும்பங்கள் மற்றும் தனிநபர் துறைகளின் கடன் பெறுதல் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதாக இலங்கை...

தீபாவளியை முன்னிட்டு பல பகுதிகளில் மதுபானசாலை பூட்டு!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாளை (08) நாட்டின் பல பகுதிகளில் உள்ள மதுபான விற்பனை நிலையங்களை மூடுவதற்கு கலால்...

மக்கள் மீது அரசாங்கம் மேலதிக வரிச் சுமைகளை சுமத்தவில்லை

– பிரதி நிதியமைச்சர் அனில் ஜயந்த தற்போதைய அரசாங்கம் மக்கள் மீது எவ்விதத்திலும் தேவையற்ற மேலதிக வரிச் சுமைகளை சுமத்தவில்லை...

More like this