இலங்கையில் குடும்பங்கள் மற்றும் தனிநபர் துறைகளின் கடன் பெறுதல் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள ‘நிதி ஸ்திரத்தன்மை மீளாய்வு – 2026’ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கடந்த 2025ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் 14.8% ஆகப் பதிவாகியிருந்த குடும்பத் துறையின் கடன் வளர்ச்சி விகிதம், 2026ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் 25.4% ஆக உயர்ந்துள்ளது.
இதன் மூலம் வருடாந்த அடிப்படையில் குடும்பத் துறையின் கடன் வளர்ச்சி 10.6% அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த ஆண்டில் குடும்பத் துறையினரால் பெறப்பட்ட மொத்தக் கடன்களில் 62.5% வீதமானவை உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகள் ஊடாகப் பெறப்பட்டுள்ளன. எஞ்சிய 37.5% வீதமான கடன்கள் வங்கிசாரா நிதி நிறுவனங்கள் ஊடாக வழங்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, குடும்பத் துறையினரால் பெறப்பட்ட மொத்தக் கடன்களில் சுமார் பாதியளவான 48.9% வீதமானவை நாட்டின் பொருளாதார மற்றும் வர்த்தக மையமாக விளங்கும் மேல் மாகாணத்திலிருந்தே பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.




