கடுவெல சந்தியில் இன்று (19) காலை மின்சாதனப் பொருட்கள் விற்பனை நிலையமொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில், அந்தக் கட்டடத்தில் வசித்து வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் தந்தை, தாய் மற்றும் அவர்களது இரண்டு குழந்தைகள் அடங்குவதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
குறித்த விற்பனை நிலையம் அமைந்துள்ள கட்டடத்தில் இந்தக் குடும்பத்தினர் வசித்து வந்த நிலையில், அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் அவர்கள் சிக்கி உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.




