Homeஉள்நாட்டு செய்திஅரச ஊழியர்களின் சம்பளப் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும்

அரச ஊழியர்களின் சம்பளப் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும்

spot_img

அரச சேவையில் தற்போது பணிகளை முன்னெடுத்துச் செல்வது மிகவும் சிரமமான நிலைமையில் இருப்பதாக விவசாயம், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால் காந்த தெரிவித்துள்ளார்.

நேற்று (19) நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வரவு செலவுத் திட்ட விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அரச ஊழியர்களிடையே பல்வேறு சம்பளப் பிரச்சினைகள் காணப்படுவதுடன், பணியில் இருப்பவர்களும் நாட்டை விட்டு வெளியேறும் போக்கு அதிகரித்து வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

குறிப்பாக பொறியியல் துறையிலும் பாரிய பிரச்சினைகள் காணப்படுவதாகத் தெரிவித்த அமைச்சர், இப்பிரச்சினைகளை வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக மாத்திரம் தீர்க்க முடியாது என்றும் குறிப்பிட்டார்.

எனவே, எதிர்வரும் டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன்னர் அரச ஊழியர்களின் சம்பளப் பிரச்சினைகள் மற்றும் தமது முன்மொழிவுகளை சம்பள ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்குமாறு அனைத்து தொழிற்சங்கங்களிடமும் அவர் கோரிக்கை விடுத்தார்.

இதன் ஊடாகவே அரச ஊழியர்களின் சம்பளப் பிரச்சினைகளுக்கு நிரந்தரமானதும் விஞ்ஞானபூர்வமானதுமான தீர்வைக் காண முடியும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

spot_img

Latest articles

சாமர சம்பத் தொடர்ந்து விளக்கமறியலில்

ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவின் பிணை மனுவை கொழும்பு...

ஆளும் கட்சி படுதோல்வி!

தேசிய மக்கள் சக்தி (NPP) ஆட்சியிலுள்ள சோரணாதொட்ட பிரதேச சபையின் 2027ஆம் ஆண்டுக்கான வரவு–செலவுத் திட்டம் இன்று இரண்டாவது...

வரவு செலவுத் திட்டத்தால் இளைஞர்களுக்கு கிடைத்த உண்மையான நன்மைகள் என்ன?

தற்போதைய அரசாங்கம் சமர்ப்பித்துள்ள வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக நாட்டின் இளைஞர் தலைமுறைக்கு கிடைத்துள்ள உண்மையான நன்மைகள் என்ன...

சமூக ஊடகங்கள் ஊடாக கொலை மிரட்டல்

தற்போது சில தரப்பினர் மதங்களை அவமதித்து, சமூகத்தில் குழப்பங்களையும் தூண்டுதல்களையும் ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக மிஹிந்தலை ரஜமஹா...

More like this