Homeஉள்நாட்டு செய்திஇலங்கையில் பணவீக்கம் 9 சதவீதமாக அதிகரிக்கலாம்

இலங்கையில் பணவீக்கம் 9 சதவீதமாக அதிகரிக்கலாம்

spot_img

மத்திய கிழக்கில் நிலவும் போர் நிலைமை எதிர்பார்த்ததை விட நீண்டகாலம் தொடர்வதும், அதன் காரணமாக சர்வதேச சந்தையில் எரிபொருள் விலைகள் உயர்ந்த மட்டத்தில் நீடிப்பதும் இலங்கையில் பணவீக்கம் அதிகரிப்பதற்குக் காரணமாக அமைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

கடந்த மாத இறுதியில் இலங்கையின் பணவீக்கம் 8.3 சதவீதமாகப் பதிவாகியுள்ளதாகவும், அடுத்த மாதத்திற்குள் பணவீக்க விகிதம் 9 சதவீதம் அல்லது அதற்கு அண்மித்த மட்டத்திற்கு உயரக்கூடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று (20) நடைபெற்ற நாணயக் கொள்கை மீளாய்வு தொடர்பான அறிவிப்பு ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே மத்திய வங்கி ஆளுநர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

“2026ஆம் ஆண்டு மே மாதம் வட்டி வீதத்தை அதிகரித்தபோது, அப்போது மேற்கொள்ளப்பட்ட கணிப்புகளின்படி பணவீக்கம் மீண்டும் சுமார் 7 சதவீதம் வரை குறையும் என எதிர்பார்க்கப்பட்டது.

எனினும், தற்போது காணப்படும் கணிப்புகளின்படி, சர்வதேச நிலைமைகள் எதிர்பார்த்ததை விட நீண்டகாலம் நீடித்துள்ளன. அப்போது இந்தப் போர் நிலைமை குறுகிய காலத்திற்கு மட்டுமே நீடிக்கும் என்றும், அதன் பின்னர் எண்ணெய் விலைகள் ஓரளவிற்கு ஸ்திரமடையும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், அண்மைக்காலம் வரையிலும் எண்ணெய் விலைகள் உயர்ந்த மட்டத்திலேயே காணப்பட்டன. இதன் காரணமாக பணவீக்கமும் நாம் எதிர்பார்த்ததை விட அதிகரித்துள்ளது.

கடந்த மாதம் பணவீக்கம் 8.3 சதவீதமாகப் பதிவாகியது. அடுத்த மாதமளவில் பணவீக்கம் 9 சதவீதம் அல்லது அதற்கும் அதிகமான, அல்லது அதற்கு அண்மித்த மட்டத்தில் காணப்படலாம் என எமது கணிப்புகள் தெரிவிக்கின்றன” எனத் தெரிவித்துள்ளார்.

spot_img

Latest articles

பந்தயம் மற்றும் சூதாட்ட வரி வருமானம் 65.3 சதவீதத்தால் அதிகரிப்பு

2025ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களுடன் ஒப்பிடுகையில், 2026ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் பந்தயம் மற்றும் சூதாட்ட...

2026ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் ரூ.445.5 பில்லியனுக்கும் அதிகமான அரச முதலீடு

2026ஆம் ஆண்டின் முதல் எட்டு மாத காலப்பகுதியில் ரூ.445.5 பில்லியனுக்கும் அதிகமான அரச முதலீடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, 2027ஆம் ஆண்டுக்கான...

சாமர சம்பத் தொடர்ந்து விளக்கமறியலில்

ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவின் பிணை மனுவை கொழும்பு...

ஆளும் கட்சி படுதோல்வி!

தேசிய மக்கள் சக்தி (NPP) ஆட்சியிலுள்ள சோரணாதொட்ட பிரதேச சபையின் 2027ஆம் ஆண்டுக்கான வரவு–செலவுத் திட்டம் இன்று இரண்டாவது...

More like this