2025ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களுடன் ஒப்பிடுகையில், 2026ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் பந்தயம் மற்றும் சூதாட்ட நடவடிக்கைகள் மூலம் கிடைத்த வரி வருமானம் 65.3 சதவீதத்தால் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து 9.9 பில்லியன் ரூபாவாக உயர்ந்துள்ளதாக 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம், பொருளாதாரம் மற்றும் நிதி நிலைமை தொடர்பான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2025ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் பந்தயம் மற்றும் சூதாட்ட நடவடிக்கைகள் மூலம் கிடைத்த வரி வருமானம் 6.0 பில்லியன் ரூபாவாகக் காணப்பட்டது.
எவ்வாறாயினும், பங்குப் பரிவர்த்தனை வரி மூலம் கிடைத்த வருமானம், கடந்த ஆண்டின் முதல் எட்டு மாதங்களுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் 16 சதவீதத்தால் குறைந்து 3.8 பில்லியன் ரூபாவாகப் பதிவாகியுள்ளது.
2025ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் பங்குப் பரிவர்த்தனை வரி மூலம் கிடைத்த வருமானம் 4.6 பில்லியன் ரூபாவாக இருந்தது.
வெளிநாட்டுப் பொருளாதார அதிர்வுகளின் காரணமாக பங்குப் பரிவர்த்தனைகளின் பெறுமதி மற்றும் அளவில் ஏற்பட்ட ஏற்ற இறக்கங்களே இந்த வருமானக் குறைவுக்கான முக்கிய காரணமாக அமைந்துள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




