வருமான வரி அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்குத் தேவையான PIN மற்றும் TIN இலக்கங்களைப் பெற்றுக்கொள்வதற்காக, உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் அனைத்து பிராந்திய அலுவலகங்களும் இன்று (28) மற்றும் நாளை (29) திறந்து வைக்கப்படவுள்ளன.
2025/2026 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரி அறிக்கைகளை நவம்பர் 30ஆம் திகதிக்கு முன்னர் இணையவழி (Online) ஊடாகச் சமர்ப்பிக்க வேண்டும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் ஏற்கனவே அறிவித்துள்ளது.
குறித்த காலக்கெடுவுக்குள் வரி அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதன் மூலம் இறுதி நேரத்தில் ஏற்படக்கூடிய சிரமங்களைத் தவிர்த்துக்கொள்ள முடியும் என திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
வருமான வரி அறிக்கைகளைச் சமர்ப்பிப்பது தொடர்பான மேலதிக தகவல்கள் மற்றும் தெளிவுபடுத்தல்களைப் பெற்றுக்கொள்ள 1944 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தைத் தொடர்புகொள்ளலாம்.
மேலும், உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.ird.gov.lk ஊடாகவும் தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.




