web log free
November 16, 2025

விஜய்க்கு ஆதரவு வழங்கும் வடிவில் அஜித் கருத்து!

கரூர் நெரிசலுக்கு அந்த தனிநபர் மட்டுமே காரணம் அல்ல. நாம அனைவருமே காரணம் தான். ஊடகங்களுக்கு இதில் ஒரு பங்கு இருக்கிறது என்று நடிகர் அஜித் தெரிவித்துள்ளார்.

ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அஜித் சமீபத்திய அளித்த பேட்டியில்  மேலும் குறிப்பிடுகையில்,

கரூர் நெரிசல் காரணமாக தமிழ்நாட்டில் நிறைய விடயங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அந்த தனிநபர் மட்டுமே இதற்கு காரணம் அல்ல. நாம அனைவருமே காரணம் தான். ஊடகங்களுக்கும் இதில் ஒரு பங்கு இருக்கிறது. ஒரு சமூகமாக கூட்டத்தை கூட்டிக் காட்டுவதில் நாம் மிகுந்த ஈடுபாடு காட்டுகிறோம். இவை அனைத்தும் முடிவுக்கு வரவேண்டும்.

கிரிக்கெட் போட்டிகளை பார்க்க கூட கூட்டம் வருகிறது. ஆனால் அங்கெல்லாம் இப்படி நடப்பதில்லை. இது ஏன் தியேட்டர்களில் மட்டும் நடக்கிறது? பிரபலங்கள், திரைக் கலைஞர்களுக்கு மட்டுமே ஏன் இப்படி நடக்கிறது? ஒட்டுமொத்த திரையுலகத்தையும் இது மோசமாக சித்தரிக்கிறது. ஹாலிவுட் நடிகர்கள் கூட இதையெல்லாம் விரும்புவதில்லை என்று தெரிவித்தார். 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd